Nov 12, 2009
நான் நலம்
காரணம் 9.11.2009 முதல் 13.11.2009 முடிய DNA மற்றும் latest technology களில் ஒரு பயிற்சியின் காரணமாக் கோவை வந்ததால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இருந்து தப்பினேன். லதாளையும் கென்சி மற்றும் மாலதி ஆகியோரையும் அழைத்துக் கொண்டு கோவை வந்துவிட்டேன்.
’நான் நலமாக இருக்கிறேனா?’ என அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது நன்றிகள். எல்லாம் கையாஸ் தியரியின் விளைவுகள்.
மற்றபடி ’இவனுக்கு எதாச்சும் ஆகியிருக்காதா?’ என ஆவல் படும் ஏனையோருக்குச் சில வார்த்தைகள். :
“Better luck next time”
**************************************************************************************************************
Nov 11, 2009
வன தேவதை


இறைவனின் இணையடி நிழலுக்கு உவமையாக அடியவர்கள் உவமை சொல்லி மகிழ்ந்தது மரங்களைத்தான்.
”கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே” எனப் பாடிப் பரவசமானதைப் பார்க்கிறோம்.
மரத்தை வைத்து மாபெரும் தத்துவத்தைச் சொல்கிறார் திருமூலர்.
”மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை” என்பது திருமந்திரம்.
இறைவன் மனிதர்களுக்கு நல்கிய அருங் கொடைதான் காடுகள். மனிதன் பிறக்கும் போதிலிருந்து இறுதி வரைக்கும் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்து மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே காடுகள் விளங்குகின்றன.
மனித குலம் வாழத் தேவையான நீராதாரங்களை உருவாக்குவன காடுகளே! பெய்கின்ற மழையினை மலையிலே உள்ள மரங்களின் வேர்கள் இருத்தி வைத்துத் தேவையானபோது ஒரு ‘ஸ்பாஞ்ச்’ போல வெளியேற்றுகின்றன. சுருக்கமாக வனங்கள் ஒரு மேல்நிலை நீர்த்தொட்டி எனலாம்.
சூல் கொண்ட வானத்துக் கருமேகங்களைக் குளிர்வித்து மழையாய் மாற்றி மண்ணிலே விழச்செய்யும் மாய சக்தி கொண்டவை காடுகளே!
பயோ டைவர்சிடி எனச் சொல்லப் படும் பல்லுயிர்ப் பெருக்கக் கோட்பாட்டுக்கு அடித்தளம் காடுகளே! எத்தனை வகையான மாபெரும் மரங்கள், சிறு மரங்கள், புதர்கள், செடிகள், கொடிகள், தரையிலே படரும் புல் பூண்டுகள் என எத்தனை விதமான வினோதங்களைக் காடு தன்னகத்தே கொண்டிருக்கிறது. அக்காடுகளில் வாழ்ந்திடும் விலங்குகளில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை வகைகள்!
இவையேயன்றிக் காளான் வகைகள், கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிரிகள் என்று வனத்தில் வாழ்ந்திடும் உயிரினங்கள்தான் எத்தனை எத்தனை.
சிங்கம், புலி போன்ற மாமிசபட்சணிகள், அவற்றுக்கு இரையாகும் மான், காட்டெருமை போன்றவை, காட்டிலே துப்புரவுப் பணி செய்து தூய்மை செய்யும் செந்நாய், கழுதைப்புலி, காட்டுப்பன்றி போன்றவை...... இப்படிக் கலவையான் ஒரு மாபெரும் கூட்டுக் குடும்பம்தானே காடுகள்!
பல வகையான பறவைகள், பயமுறுத்தும் பாம்புகள் புழுக்கள், பூச்சிகள் இப்படிப் பறப்பன, ஊர்வன என வித விதமாய் வாழ்ந்திடும் வனங்கள் விந்தை மிகு இடங்கள் அன்றோ?
ரப்பர், தேன், மூங்கில், மூலிகைகள், அரக்கு. பிசின், எண்ணை வித்துக்கள், காய்கள், உண்ணும் பழங்கள, எரிபொருளாகும் விறகு, கட்டுமானத்துக்கு உதவும் தடி மரங்கள், இப்படிக் காடுகளின் கொடைகள் ஏராளம்.
மண் அரிமானத்தைத் தடுப்பதிலும் காடுகள் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பாக மலைப் பாதையின் ஓரத்திலுள்ள மரங்களின் வேர்கள் பூமிக்கடியில் ஒரு சல்லடை வலைப் பின்னலாக மாறி மண் அரிமானத்தைத் தடுக்கின்றன.
ஆறு மற்றும் ஓடைகளின் ஓரத்தில் இருக்கும் தாவரங்கள் நீருடன் சேர்ந்து வரும் மண்ணை நிலை நிறுத்தி அணைகளில் சேறு சேரா வண்ணம் காக்கின்றன.
காடுகள் பல்வேறு வன உயிரினங்களின் வாழிடமாக இலங்குகின்றன.
அன்றாட வாழ்வில் சோர்வடையும் மக்களுக்கு அலுப்பை நீக்கித் தூய்மையான காற்றைச் சுவாசிக்கவும் எழில் காட்சிகளைத் துய்த்திடச் செய்யவும் வாய்ப்பளிப்பது வனங்களே!
இயற்கை எழிலினைத் துய்த்திடும் அதே வேளையில் காட்டு விலங்குகளை, அவை வாழும் இடத்திலேயே கண்டு களிக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதால் சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுத்து நம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதும் வனங்களே!
சூரியனிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுப்பது ஓஸோன் என்னும் வாயுப் படலம். இதில் துவாரம் ஏற்படின் அதன் வழியே நச்சுக் கதிர்கள் புகுந்து நம் மீது பட்டால் புற்று நோய் போன்ற கொடிய வியாதிகள் நம்மைத் தாக்கிட வாய்ப்புண்டு. அந்த ஓஸோன் படலத்தில் துவாரம் விழாமல் காப்பன காடுகளே!
சங்க இலக்கியத்திலே ஒரு காட்சி!
மலையும் மரங்களும் கொஞ்சிக் குலாவும் இயற்கை எழில் சார்ந்த நிலம் அது. அங்கே மகிழ்ச்சிப் பிரவாகத்தில் இயற்கையன்னையின் உடலிலே ஊறிய உவப்புச் சுரப்பெனப் பொங்கிப் பெருகி நீர்ச் சாலையாய் வழியும் தெள்ளிய நீரருவி, தன்னுடைய தண் குரலில் தாலாட்டென ஓசையிட்டுக் குதித்தோடி ஆறென்று பேர் மாறி, அற்புதமாய்த் தவழ்ந்தோடும் கரையருகே ஒரு குடில். அக் குடிலின் முன்றிலில் தாயொருத்தி தன் இடையிலே தன் சேய் பொருத்தி உணவினை ஊட்டிட
முயல்கிற நேரம். அச் சின்னஞ் சிறு பெண் மகவோ ஊண் உண்ண மறுத்துச் சிணுங்குகிறாள். செல்லமாய்த் திரும்புகிறாள். இங்கும் அங்கும் ஓடித் தாயைக் கோபமூட்டுகிறாள்.தாய் சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.
ஓ! அவள் கண்ணில் படுகிறது அங்கே ஒரு புன்னைச் செடி. சிறுமியர் விளையாட்டாய்ப் புன்னை விதையொன்றை மணலில் ஒளித்து விளையாடிய போது தப்பிப் பிழைத்து முளைத்த செடி அது. தன் மகவை நோக்கித் தாய் கூறுகிறாள். “கண்ணே கனியமுதே! கட்டாணி முத்தே! என் செல்வமே! அருகில் வாராய். இதோ இப் புன்னைச் செடியினைப் பாராய். இதற்கு இப்போது நான் நீரூற்றுவேன். நிகழ்வதைப் பாரடி என் கண்மணி” எனச் சொல்லிச் சிறிது சோறுடன் கலந்து நிறைய நீரினைப் புன்னைச் செடிக்கு ஊற்றுகிறாள். தண்ணீர் மண்ணிலே கலந்து காணாமல் போகிறது.“என் வாழ்வின் ஒளியே! செல்வக் களஞ்சியமே! கண்டாயா? உன் தமக்கை – ஆம் – இந்தச் செடி உன் தமைக்கயன்றோ? - உன்னை விட எவ்வளவு நல்லியல்பு வாய்க்கப் பெற்றவளாய் இருகின்றனள்? சோறும் நீரும் மறுப்பின்றி உண்கிறாளே! நீயும் உன் தமக்கை போலிருக்க மாட்டாயா” என அன்பும் அரவணைப்புமாய்ச் சோறூட்டுகிறாள் தன் சேய்க்கு. காலம் செல்கிறது. எத்தனை விந்தைகள்! சிறு செடி புன்னை இப்போது குறு மரமாகிறது. குறு மரம் கொப்புங் குலையுமாய்ப் பூத்துக் குலுங்குகிறது. பூவாய்ச் சொரிகிறது. செடியோடு வளர்ந்தாள் நம் சிறுமியும். காலத் தச்சன் கை வினையால் சின்னப் பெண் வளர்ந்து திமிர்ந்த ஞானச் செறுக்கோடு திகழ்கிறாள். ஞானம் மட்டுமா திமிர்கிறது? இளமை அவளுடலில் எண்ணற்ற பொலிவை ஏற்றுகிறது. ‘சொக்க வெள்ளிப் பாற்குடமாய்’ப் பருவமே கவிதையாய்ப் பவனி வருகிறாள் அந்தப் பாவை. பருவமும் உருவமும் பக்குவப்பட்டபின் காதல் மெல்லவே வந்து கன்னியின் உள்ளத்தில் கள்வன்போல் நுழைகிறது. ஒரு நாள் இனிய மாலைப் பொழுது. அவள் அந்தப் புன்னை மரத்தடியில் நின்று கால் விரலால் மண்ணிலே கோலமிட்டு எதிர் நோக்கியிருக்கிறாள் தன் உள்ளம் கவர் கள்வனை. வருகிறான் தலைவன். தலைவியைப் பார்க்கிறான். மெல்ல அருகிலே வருகிறான். எட் பூ ஏசிய நாசியும், விற்புருவமும், காதருகே தொங்கும் கருங்குழலுடன் கார்மேகம் போல் கணுக்கால் வரை தொங்கும் கூந்தலும்கிறுகிறுக்க வைக்கிறது. பாடாய்ப் படுத்துகிறது அப் பாட்டுடைத் தலைவனை! தன்னிலை மறக்கச் செய்கிறது. தள்ளாடுகிறது நடை! “கண்ணே கட்டழகி! உன் பேரெழிலை மாந்தி மகிழ்ந்திட வந்தேனடி! காதல் கல்வெட்டினைக் கட்டாயம் செதுக்கி இந்தக் காலக் கல்வெட்டில் பொறிப்போமடி! வா! வந்து தேனள்ளித் தா! “நிறுத்தும் பித்தரே! நீர் பெரிய காதற் சித்தர் போலும். மானே தேனே என்றெல்லாம் குறுஞ் செய்திசொன்னாலும் கூடாதையா உமதாசை”
“ஏனடி ஏந்திழையே! கூட என்ன தயக்கம் என் கூட?” “சித்தரே! இதோ பாரும்! இங்கே நாமிருப்பது எங்கே எனப் பாரும்! இப் புன்னை யார் தெரியுமா? மரம் அன்று! என் தமக்கை! தமக்கை அருகிருக்கத் தங்கையுடன் தாகம் தணிக்க நினைப்பது தவறன்றோ? நான் சிறுமியாயிருக்கிற போது என் அன்னை இப் புன்னையை என் உடன் பிறந்தாளாகவே உணரச் செய்திட்டாள். எனவே காதல் கல்வெட்டினை இங்கே செதுக்க முயலாதீர்!”நுவ்வினும் இனியது நுவ்வையாகும்
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே”
ஆம்! அந்தக் காலத்தில் மரங்களைத் தங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே கருதியிருந்தனர். இதை ஆங்கிலத்திலே unification என்றும் சொல்வர். தமிழிலே ஒன்றுபடுதல் எனலாம்.
************************************************************
Nov 9, 2009
இணையம் – தமிழ் ஆர்வலர்கள் கலந்தாய்வு

நாசாவுல பெரிய விஞ்ஞானியா இருக்கிறவரு திரு.கணேசன். தமிழ் மணத்தின் வளர்ச்சியில நெம்பப் பாடு பட்டவரு. மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் - மிகப் பெரிய செல்வந்தரா இருந்தாலும் - நெம்ப எளிமையானவரு. தமிழும் இணையமும் கைகோத்து வளரணும்னு தாகம் உள்ளவரு. அவரே சொன்னதுக்கப்பறம் போகாட்டி நல்லா இருக்குமா?
குறுகிய இடைவெளியில தகவல் கிடைச்சதால திரு லக்கிலுக், சிவராமன், நர்சிம், ஜ்யோராம்சுந்தர் போன்றவிங்ககிட்ட சொல்ல முடியலை. அடுத்த முறை சென்னையில இதுமாதிரி கருத்தரங்கு நடந்துச்சுனா அவிங்க நிச்சயம் கலந்துக்கணும். ஏன்னா அவிங்க மாதிரி முனைப்பான இளைஞர்கள் இது மாதிரி விஷயங்களை இளைய தலமுறைக்குக் கொண்டு போக மிகவும் உறுதுணையா இருப்பாங்க.
செரி. விஷயத்துக்கு வர்ரேன்.
காரு வேற சர்வீசுக்குப் போயிருச்சா? மழ வேற தூறீட்டிருந்துச்சா? எப்பிடிடா போறதுனு ஓசனையா இருந்துச்சு. அப்பத்தான் காசி போன் பண்ணுனாரு. அவரும் வர்ரதாகவும் என்னைய ஊட்ல வந்து பிக்கப் பண்ணிக்கிறதாவும் சொன்னாரு.
போனம்.
அங்க சஞ்சய் கந்தி, விஸென்ட் (மர வளம்), சுப்பையா வாத்தியார், இவிங்கல்லாம் வந்திருந்தாங்க. தாரணி ப்ரியாவும் வந்துட்டு ஒடனே போயிட்டாங்க. காலேசுப் புள்ளைகளும் பசங்களும் கலந்துகிட்டாங்க.
யூ.எஸ் ஓஹியோவைச் சேர்ந்த International Forum for Information Technology (உத்தமம்) அமைப்பைச் சேர்ந்த எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் திரு. தமிழரசன் நெம்ப அழகாத் தமிழை இணையத்துல பயன்படுத்துறதைப் பத்தி வெளக்கினாரு. அப்றமேல்ட்டுத் தமிழ் விக்கிபீடியன் திரு.ரவிஷங்கர் அற்புதமாத் தமிழ் இணையத்தைப் பத்திப் பேசுனாரு. விக்கி பீடியா பத்தி அருமையா விளக்கினாரு. அவரு பேசுனதில என்னையும் மாணவர்களையும் நெம்பக் கவர்ந்த விஷயத்தை அவர் பேச்சுலயே சொல்றன்.
“இப்ப நீங்க எந்தத் துறைக்குப் போய்ப் புதுசா எதாச்சும் செய்யணும்னு ஆரமிச்சாலும் ஏற்கனவே அதில செஞ்சிருப்பாங்க. ஆனா தமிழ் இணையத்தில சாதிக்க வேண்டியது ஏராளம் இருக்குது. நல்ல வேலை வாய்ப்பும், மாசம் ஒரு லச்சம் அளவுக்கு மேல சம்பாதிக்கவும் நெம்ப ஸ்கோப் இருக்குதுனு சொன்னாரு.
அது மட்டுமில்ல! தூய தமிழில தன்னோட ப்ரசன்டேஷன அமைச்சிருந்தாரு. சிரிச்ச மொகத்தோட சிறப்பா விளக்கினாரு. அவரோட வலைப்பூ முகவரி http://blog.ravidreams.net/
அவரோட செல் நம்பர் வேணும்கிறவிங்க எனக்கு ஈமெயில் அனுப்புங்க.
அப்பறம் ப்ராக்டிகலா மாணவர்களுக்குச் செயல்மொறை விளக்கம் எல்லாமுங்கூடிப் பண்ணுனாங்க.
அமெரிக்காவுல இருந்தாலும் இந்த – அட – என்னங்க அது – ஆமாம் - பட்ற – இதுல கலந்துக்கச் சொல்லி மோட்டிவேட் பண்ணுன அய்யா கணேசனுக்கு எத்தன தரவ வேணும்னாலும் நன்றி சொல்லல்லாம்.
உத்தமம் அமைப்புல எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இருக்கணும்னு பவர்பாயிண்ட் ப்ரசண்டேஷன் காமிச்சப்போ நானு, ’ஒரு சந்தேகம்’னு கையத் தூக்கினேன். (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்ல கமலகாசன், ப்ரகாஷ்ராஜ் கிட்ட டவுட்டுக் கேக்கக் க்ளாசுல கையத் தூக்குவாரே அப்பிடி இல்ல!)
”என்னங்க ஒங்க டவுட்டு?”
”எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது இனியதொரு கொள்கை. ஆயின் அதை விளக்கும் சரிவட்டைகள்(ஸ்லைடுங்கோ) ஏன் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன என அறிய விழைகிறேன்” அப்படின்னன். பொறகாண்ட காலேசுப் பசங்க லேசாக் கையத் தட்டுனாங்க.
அதுக்கு நாலஞ்சு பேரு விளக்கம் சொன்னாங்க.
மெதுவாக் காசிகிட்ட, “இப்படி லேசாச் சலசலப்ப ஏன் உண்டாக்கினேன் தெரியுமா?!’ அப்படின்னேன்.
”ஏனுங்க?”.
”தூக்கம் வராம கெவுனிக்கிறதுக்குத்தானுங்க”
****************************************************************************************
Nov 6, 2009
இனான்ய
யாகவா முனிவரை அதிகம் பேருக்குத் தெரிந்திருக்கும். சென்னைக்குப் பக்கத்திலே வாழ்ந்து மறைந்தவர். தன்னை முக்காலமும் அறிந்தவர் என்றும் பறவைகள் மொழி தெரிந்தவர் என்றும் இரவில் அசுரர்களுடன் போரிட்டு அழிப்பவர் என்றும் சொல்லிக்கொண்டார். பல நோயாளிகளுக்கு அவர் மருந்தாகத் தந்தது தனது தோட்டத்துக் கிணற்று நீரே. இதையெல்லாம் விட அவர் தனக்கு ’இனான்ய’ என்ற தேவபாஷை தெரியும் எனவும் சொன்னார்.
எல்லாருக்கும் புரிகிற மாதிரி சிறுகதை எழுதவேண்டும் என்னும் சமீபத்திய பதிவுலக நெறிக்கு ஏற்ப, ஒரு சிறுகதை புனையும் எனது அவா நிறைவேறவும், ’இனான்ய’ மொழி எனக்கும் தெரியும் என்ற காரணத்தினாலும் அம்மொழியில் எழுதியுள்ள சிறுகதை ஒன்றினைப் பதிவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
(முக்கியமான் முன்குறிப்பு : பின்னூட்டங்கள் எல்லா மொழியிலும் வரவேற்கப் படுகின்றன.)
இனிங்ஞிஞாஞௌ
இஞ்ஞியான இன்னானி இங்ஙியா யைஞி. இஞ்ஞ்ஞோயிய யானையோனிய இங்ஙி.
“ஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்.
“யயய் யயயாங் யய்ஞ்ஞி”
யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்ஞ்ஞேனஞௌ யானையோனி யோஞோஙோ யய்ய.யயா. யாஞங யீய. ய்ஞோனி யய்ங்ஞே ஙா. ய்ஞ்ங்ஞை ஞஙேஞே இஞ்ஞியான இன்னானி
ஞ்ன்ஹ்யூஞி ஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ்
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌ யானையோனி யோஞோஙோ யய்ய.யயா. யாஞங யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌ யானையோனி யோஞோஙோ யய்ய.யயா. யாஞங யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌ யானையோனி யோஞோஙோ யய்ய.யயா. யாஞங யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌ யானையோனி யோஞோஙோ யய்ய.யயா. யாஞங யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌ யானையோனி யோஞோஙோ யய்ய.யயா. யாஞங
ஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ்!
ஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்
“யயய் யயயாங் யய்ஞ்ஞி”
யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌ ஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்
“யயய் யயயாங் யய்ஞ்ஞி”
யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்
“யயய் யயயாங் யய்ஞ்ஞி”
யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்
“யயய் யயயாங் யய்ஞ்ஞி”
யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்
“யயய் யயயாங் யய்ஞ்ஞி”
யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை, ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்“யயய் யயயாங் யய்ஞ்ஞி”
யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌஙோஙோஞ்ஞி! ஙோஙோஞ்ஞி! ஞய்ஙி? ஞ்ய்யொங்ஞி, ஞய்ங்ஙை,
ந்கியோய ய்ங்ஞ் யஙஞ்“யயய் யயயாங் யய்ஞ்ஞி”யயாயோ.யயஙொஞ் ஞியொங்யிஞா. ய்ய்ய்ஞ்ஙேஙை யய்ஞேஙாஙூ.
ய்ஞோனியய்ங்ஞேஙா.ய்ஞ்ங்ஞைஞஙேஞே. யயோனிஞ் யாயய்யா யஙேஞோனைஞை யாயீய யாயீயாஞை யய்ய ஞீனௌஙாஞ் யயா. யேயுய்ஞேயுய் ந்கோஞேனஞௌ
(கதை எப்படிங்க? நல்லா விறுவிறுப்பாகவும் எளிதில் புரிஞ்சுக்கிற மாதிரியும் இருந்துசுங்களா?)
****************************************************************************************
Nov 5, 2009
GOOD BAD AND UGLY
எல்லரும் சேந்து சிரிக்கிறது குட் ஹ்யூமர்! ஒருத்தரைக் கிண்டல் பண்ணி மித்தவிங்க சிரிக்கிறது பேட் ஹ்யூமர்..
சில சமயம் நண்பர்களை ஜாலியாக் கிண்டல் பண்ணுவம். எங்கூட்ல ரண்டு டைப் ஹ்யூமரும் இருக்கும்.
உதாரணத்துக் சிலதைப் பாப்பம்..
ரண்டு வருசம் முந்தி பாலாஜி லண்டன் புறப்படுறான்.
சரி! விஷயத்துக்கு வர்லாம். அவன் மொதோ மொதலா தூர தேசம் புறப்படுறான். ஊட்ல ஒரே இறுக்கமான சூழ்நெல. லதாளுக்கும் அளுவாச்சியா இருக்குது. எனக்கும் கெதக்குனுதா இருக்குது.. வெளிய காம்பிச்சுக்கரலை. கிரிதர்தான் வழக்கம்போல அலட்டிக்காம இருக்கான்.
“லண்டன் என்ன பெரிய லண்டன்!. எத்தனை கிமீ தூரம்னு பாக்காதீங்க! எத்தன மணி நேரம் ட்ராவல்னு பாருங்க. செரியா 12 மணி நேரமுங்கூடி ஆகாது. நெனைச்சா வந்துட்டுப் போடா பாலாஜி! என்ன ஒண்ணு! ஃப்ளைட் டிக்கட்டுதான் எச்சுச் செலவு! அதை நீ சம்பாரிச்சரமாட்டியா என்ன?” னு நைசாப் பேசறான். கிரிதர். ம்ஹூம்.! ஒரே டென்ஷன்! பாலாஜியும் திரு திருனு முழிச்சிகிட்டிருக்கான்.
அப்பறம்தான் அடுத்த அஸ்திரத்தப் பிரயோகிச்சான் கிரிதர்.
“”டேய்! பாலாஜி! ஃப்ளைட்ல ஏறிட்டு “ஹீத்ரு ஏர்போர்ட் ஒரு டிக்ககட் வேணும்! கண்டக்டர் எங்கேனு கேக்காதடா!” அப்படீனு கலாய்க்க ஆரமிச்சான்.. நானும் எம் பங்குக்கு, ”சீட் பெல்ட் முன்னாடி இருக்கும். இடுப்பச் சுத்திக் கட்டிக்கணும். கார்ல போடுற மாதிரி தோளச் சுத்திப் போட்டுக்காத”ன்னேன். லேசா சிரிப்பாயிருச்சு.
நான் எதாச்சும் கந்தரகோளம் பண்ணிப் போட்டன்னா அம்மாகிட்டப் போட்டுக் குடுக்குறதே பசங்களுக்கு வேலையா இருக்கும். ஒரு விஸ்கா புதுப் பேஸ்டப் பலமா அமுக்கிட்டேன். ‘சீத்’துனு வெரல் சோடு பேஸ்ட் வெளிய பிதுங்கி உளுந்திருச்சு.
“அம்மா! அப்பன் பேஸ்ட வேஸ்ட் பண்ணிப் போட்டுது!”
”அது வேறொண்னுமில்ல கண்ணு! கல்யாணத்துக்கு முன்னால வரைக்கும் உங்கப்பனுக்குப் பேஸ்ட்டுனா என்னனே தெரியாதா? கோபால் பல்பொடிதான். பாவம்! நாந்தான் “இதுதாங் பேஸ்ட்! இதப் பிரஸ்ஸுல வெச்சு இப்படி வெளக்கோணும்னு சொல்லிக் குடுத்தேன்!”
“ஏப்பா? நெசமா?”
“அய்யே! பொய்யி! நானாச்சும் பல்பொடி கேஸு!. உங்கம்மா செங்கல்லையும் கரித்தூளையும் கலந்து வெளக்கீட்டுத் திரிஞ்சா!”
இப்படிப் போகும் சில நாள்.
இதாச்சும் பரவாயில்ல. ஊட்டுச் சனம் முச்சூடும் ஒண்ணாச் சேந்துகிட்டு எதாச்சும் தமாஸ் பண்ணிக்குவோம்.
அப்பிடித்தா ஒரு பதனஞ்சு வருசம் முந்தி கொடைக்கானல்ல நான் வேல பாக்குறப்ப ஒரு நாளு நடந்துச்சு.
என்னயப் பாக்க ஒரு காண்ட்ராக்டரு வந்திருக்காரு. நானு அப்பக் குளிச்சிகிட்டிருந்தேன். லதா சமையலூட்ல இருந்திருக்கா.. பசங்களும் உள் ரூம்புல இருந்திருக்காங்க.
“லதா! இன்னைகு என்ன டிப்பன்?”
”இட்லிங்”
“அய்! நம்மூட்ல இன்னைக்கு இட்லி! அஹா! பாலாஜி, கிரிதர்! இன்னைக்கு நம்மூட்ல இட்லியாம்டா?”
“ஹய்யா! கேக்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு? என்ர ஸ்கூல் ஃபிரண்சுகிட்டயெல்லாம் எங்கூட்ல இன்னைக்கு இட்லினு சொல்லப் போறன்!”
“ஆமாண்டா! பாலாஜி! எத்தன நாளாசுடா இட்லி தின்னு! ஹை! எங்கூட்ல அரிசி மாவு உளுந்துமாவு சேத்து எங்கம்மா இட்லி பண்ணியிருக்குது!”
“ஆமாங்! எத்தன நாளுதா களியையும் கேள்வெரகையுமே திம்பீங்க? இன்னைக்காச்சும் வாயாற எல்லாரும் இட்லி திம்பீங்களாம்?’ இப்படி ஒரே சிரிப்பும் கூத்துமாய் இருந்துச்சு.
வெளிய லேசா இருமற சத்தம்கேட்டுது .
செரி! இதெல்லாம் இப்ப எதுக்கு நாவகம் வந்துச்சுங்கிரீங்களா?
பதனஞ்சு வருசத்துக்கப்பறம் எதேச்சையா அவர முந்தா நேத்து மார்க்கட்ல பாத்தேன். நெம்ப நேரம் பிரியமாப் பேசிகிட்டிருந்தாரு. அப்றமேல்டுத் தயங்கித் தயங்கி,க் கேட்டாரே ஒரு கேள்வி!
“சார்! பக்கத்துல நல்ல ஓட்டல் இருக்குது. இட்லி சாப்புடுறீங்களா? பார்சலும் உண்டுங்க!”
****************************************************************************************************************
Nov 2, 2009
கேள்வி பதில் போட்டாச்சு
கேள்வி :
1) யார் அந்தக் கயவன்?
பதில் :
’கயவன்’ அப்படினு மரியாதைக்குறைவா எழுதலாமா? நாங்கெல்லாம் கோயமுத்தூர்க்காரவிங்க. ’கயவர்’னு வேணாக் கேளு. அப்புறம் ’கயவன்’ அப்படிங்கிறது ஆண்பாலாச்சே! பொதுப்பால்ல சொல்றதுதான முறை?
கேள்வி :
2)புதுசா எதாவது செய்யனும்னா உடனே என்ன செய்வீங்க?
பதில் :
கீழ்க் கண்டதில் ஒண்ணைச் செய்வேன். அது என்னனு நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்க
ஆடுவேன்
பாடுவேன்
தேடுவேன்
நாடுவேன்
போடுவேன்
வாடுவேன்
மூடுவேன்
சாடுவேன்
சூடுவேன்
ஓடுவேன்
காசி
கேள்வி
புலி, கரடி கணக்கெல்லாம் எடுக்கிறீங்களே, உண்மையிலேயே அததனையும் காட்டுல இருக்கா, இல்ல, சும்மா ஒரு நிதுக்கா?
அத்தனையும் இருக்கு. கணக்கெடுக்கப் பல அறிவியல் மெதேடுகளும் இருக்கு. இதைப்பத்தி ஒரு பதிவு நான் ஏற்கனவே எழுதினதா நாபகம்.
வால்பையன் :
எந்தெந்தக் காட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க அனுமதி உண்டு?
வன உயிரினங்களின் முக்கியத்துவத்தைக் கணக்கில் கொண்டு ஷெட்யூல் I, II .......... இப்படிப் பிரிச்சிருக்காங்க. Vermin அப்படிங்கிற வகைகளில் காக்கை குருவியெல்லாம் வரும். அதை வளத்தலாம். காட்டு விலங்குகள் காட்டிலயே இருக்கட்டுமே? வேலில போறதை வீணா ஏன் வீட்டில உட ஆசைப்படுறீங்க?
ரவிப்ப்ரகாஷ் :
கேள்வி
சென்ட்ரல் பக்கம் கூப்பிட்டா வரமாட்டீங்களா? ஏன்? மர்மமா இருக்கே? எனக்கு மட்டும் இ-மெயில்ல சொல்லிடுங்க. இல்லாட்டி மண்டை காய்ஞ்சு போவும்!
பதில் :
அடலேறு :
கேள்வி
கேள்வி கேட்க்க வேண்டும் என்று முடிவு செய்த்ததும் முதலில் கேட்கத் தோன்றியது உங்கள் துறை சம்பந்தமானது, ஆனால் நம் பேச்சினூடாக உங்கள் எழுத்தின் மீது தீராத காதலால் எழுத்துலகில் இருந்தே சில கேள்விகள் :
1)தங்களை மிகவும் பாதித்த எழுத்தாளர் யார்?
பதில் :
2)ஏன்?
அவரின் எழுத்து கவிதையும் மனோதத்துவமும் சேர்ந்து வாசகனைப் பிரமிக்க வைக்கும்.
ஒரு சமயம் ரயில் முன் வீழ்ந்து அடிபட்டு இறந்தவனை அவர் விவரித்திருப்பதைப் பாருங்கள்.
ஆனால் இன்று செத்துப் போனவன் சின்ன வயது. இல்லை இரயில் தள்ளிவிட்டது. அறியக்கூட அவனுக்கு நேரமிருந்திருக்காது. இல்லாவிடில் முகத்தில் எப்படி அத்தனை சாந்தம்! உதட்டோரம் சிறு முறுவலின் முன்நிழல் கூட! இன்பந்தந்த ஏதோ ஞாபகத்தில் தன்னையிழந்து வண்டி வந்ததுகூடத் தெரியாமல்
பாலந்தாண்டுகிறேனென்று சமுத்திரத்தையே தாண்டிவிட்டான்.
இதையும் படியுங்கள் :
ஆமாம், அக்கரையில் காத்திருக்கும் காரிருளே! உனக்குக் கையென்றும் காலென்றும், முலையென்றும், தொடையென்றும் தனியில்லை. அவனை நீ என்ன சைகை எப்படிக் காட்டி உன்னுள் வலித்துக் கொண்டாயெனும் வியப்பில் எண்ணந் திளைக்க திளைக்க நெஞ்சு முள்மேல் மீன் நெளிந்து வளைந்து மாட்டிக் கொள்ளாமல் துள்ளி விளையாடி அடிவயிற்றில் ஓளிமருட்சி காட்டுகிறது."
அவரின் சில உவமைகள் :
கரும்பலகையில் ஆணியால் கோடிழுத்தாற் போல் கிறீச்சிட்டு, கீழிருந்து அக்குரல் எட்டிற்று"
"புஸ்புஸ்ன்னு கொல்லன் பட்டறைத் துருத்தியாட்டமா மூச்சு விட்டுண்டு"
"என்னடா சொல்லவரே?, மாவிளக்குமா திங்கற மாதிரி வாயைக் குதப்பிண்டு"
"சவுக்கு நுனியில் கட்டிய ஈயக்குண்டு போல வார்த்தைகள் தெறித்தன"
"இவர் இப்படித் தொடர்ந்து என்னைக் கவனிக்கறப்ப, என்னுடைய தப்புகள் மாத்திரம் என்மேல் ஈட்டிகள் மாதிரி துருத்திண்டு நிக்கறதுகள்"
"அப்பாவின் கறுகறு தாடி தொப்புள் வரை இறங்கி மாலைக் காற்றில், ஜோரா வெட்டிவேர்த் தட்டி மாதிரி மெதுவா அசைஞ்சுண்டிருக்கும்"
"அவள் இப்போது ஒருபுறமாய்ப் படுத்து இருக்கையில், பூமியைப் பொத்திய இடது செவியில், பூமி மேல் அதிரும் அத்தனை சப்தங்களும் படுகையில், பூமியின் நாடியை கேட்பது போலிருந்தது"
"பஞ்சுப்பொதியில் பொறி வைத்தாற்போல, கண்ணப்பன் சிவதரிசனம் கண்டாற்போல, மாமனார்க்கு தேசத்தொண்டில் ஆர்வம் வந்துவிட்டது"
"என்னவோ குளவிக் கொட்டிக் கொட்டி விஷத்தையேற்றுமாம். அது மாதிரி அம்மா கறுவிக் கறுவி அவளுக்குள் ஏதோ இறுகிக் கனத்துக் கொண்டுவருவது போலத் தோன்றியது"
"அம்மா பரந்து, தளர்ந்து செந்தாழை மேனியோடு எங்கோ பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கையில், என்னவோ யாககுண்டத்தில் நின்றெரியும் நெருப்பைப் போலக் கிட்ட அண்டக்கூட நெஞ்சு அஞ்சும்"
3)எந்தப் படைப்பு? வரிகள் முடிந்தால் குறிப்பிடவும்.
அபிதா என்றொரு நாவல்
அடடா! எதைச் சொல்வது எதை விடுவது?
கல்லூரி வாழ்க்கை முடித்து வேலையிலும் சேர்ந்த பிறகு நமக்குத் தெரியாததைப் புதிதாக என்ன எம்.ஏ.வில் சொல்லித்தந்துவிடப் போகிறார்கள்என்ற ஆணவத்தில் எம்.ஏ.தமிழ் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலே கரஸ்பாண்டன்ஸ் கோர்சில்படித்தபோது லா.ச.ராவின் எழுத்துக்களில் மயங்கினேன். அவரும் என்னைப் போல ஒரு சாப்பாட்டுப்பிரியர் என்று நினைக்கிறேன். வத்தல் குழம்பு பற்றி விவரிப்பார் பாருங்கள். ஆஹா!
இன்னும் ஒரு படைப்பில் சின்ன வயது மகன் ஒரு சின்னப் பொய் சொன்னதைத் தாங்காமல் தகப்பன் வேதனைப் படுவதை மிக அழகாக விவரிப்பார். பையன் ஒரு பாக்குத் துண்டத்தை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வான். அதை அப்பாவிடம் மறைத்து விடுவான் .அந்தப் படைப்பு எது என இப்போது நினைவில்லை, அதைத் தேடுவதிலேயே கேள்வி பதில் பதிவிடுவது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது,. இன்னொரு சமயம் அதைச் சொல்கிறேன். அந்தக் கதையை எனது மகன்களிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தேன். எனது மகன்கள் என்னை ஒரு நண்பனாக ஏற்று இன்று வரையும் நடக்க அக்கதையும் ஒரு காரணம்.
ராகவேந்திரன் :
கேள்வி
உண்மையிலே உண்மையான உண்மை என்ன ?
பதில் :
உண்மைதான்.
ஸ்வாமி ஓம்கார் :
ஒரு நாள் காலையில் கண் முழுச்சு பார்த்தா நீங்க பெண்ணாக இருக்கீங்க. உங்க அடுத்த ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
பதில் :
(முகம் பார்க்கும்) கண்ணாடியை எடுத்துப் பார்த்து உறுதி செய்து கொள்ளுவேன்.
மோன நிலையில் முகம் வெளுத்துப் பற்கள் கிட்டித்து, கூந்தல் கலைந்து, பூக்கள் சிதற, உடல் குழைந்து – தளர்ந்து, வேர்த்து விறுவிறுத்து, செந்தூரம் வேர்வையிற் கரைந்து, அர்த்தமற்ற வார்த்தைகளை அனத்தல்போல் வெளியிட்டு, அனலாய் மூச்சைத் தந்து, கொலுசு கழன்று விழ, கிடந்திருக்கும்போதே - படர்ந்திருக்கும்போதே - பறக்கின்றதாய் உணரச் செய்யும் அப்பரவச நிலையை நானும் எய்திப் பார்த்திட ஆவன செய்வேன்.
கிருபாநந்தினி :
கேள்வி
ஜெமினிகணேசனுக்கும் உங்களுக்கும் குறைந்தபட்சம் பத்து ஒற்றுமைகள் சொல்லுங்க, பார்ப்போம்!
பதில் :
(பொதுவில் எல்லாரும் படிக்க இயலாத வகையில் தங்கள் பிளாக்கை வைத்திருப்போர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லை. இருப்பினும் கேள்வி சுவாரசியமாய் இருப்பதால் பதில் சொல்ல விழைகிறேன்.)
அவரும் நல்ல நடிகர்.
லேசாக வயதான பின்னரும் ஈர்ப்புச் சக்தி அவருக்கும் உண்டு.
நிறம் தங்கம்
ஆண் நண்பர்கள் குறைவு.
அவர் நிறைய எழுதினார் செக்கில். நான் எழுதுவது புக்கில்.
அவருக்கு மன்னன் என்று பெயர் இருக்காமே?
புகைப்படம் எடுத்துக் கொள்வதில் அவருக்கு ஆர்வம் அதிகமாமே?
நட்புக்கு நிறையச் செலவு செய்வாராமே?
குடும்பத்தினர் மீது நெம்பப் பிரியம் கொண்டவராமே?
ஆங்கிலமும் பிழையின்றி எழுதவும் பேசவும் தெரிந்தவராமே?
மங்களூர் சிவா :
கேள்வி
ட்ரெய்ன்ல சென்ட்ரல் போகாம சென்னைக்கு எப்பிடிப் போவீங்க?
பதில் :
Blogger! Your kind attention please! Train Number 6108 will leave from Coimbatore and arrive Egmore.
சீனா :
கேள்வி :
காதல் என்பது வாழ்வினில் ஓர் அத்தியாவசியமான நிகழ்வா – இல்லையா?
பதில் :
ஏற்கனவே ஒரு முறை சொன்னதை இங்கே திரும்பச் சொல்கிறேன். “ப்ராக்ஸிமிடி, தாழ்வு மனப்பான்மை, அபிமானம், சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை, ஊடகங்களின் தவறான கற்பிதங்கள், சுயநலம், இதுபோன்ற காரணிகளுள் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டனவோ – அத்துடன், அடிநாதமாக இலங்கும் பால் வேட்கையும் கலந்த விசித்திரக் கலவைக்குக் காதல் என்று ஒரு பொதுச் சொல் புழக்கத்தில் இருந்து வருகிறது. ”
இது அத்தியாவசியமா இல்லையானு நீங்களே தீர்மானிச்சுக்கோங்க.
பதில் :
நெனப்புத்தான பொழப்பக் கெடுக்குது!
3)புத்துணர்ச்சிக்கு புதுசா ஏதாச்சு பண்ண ரூம்பு போட்டு ரோசிக்கலாமா?
ரூம்புப் பிரச்சினைதான் நமக்கில்லையே?
ஆலோசனை மட்டுக் குடுங்க போதும்.!
நாதாஸ் :
கேள்வி :
நீங்க நடிக்கப் போற புதுப் படத்தோட பேரு என்ன ?
பதில் : நிச்சயம் ஒனக்கு உண்டுடா மவனே!
(அட! படத்தோட பேருதாங்க அது)
பெஸ்ட் ஃபண்ட் அருண்!
1)…………………………………
பதில் :
சில பல காரணங்களால் இப்போதைக்கு ஒங்களோட மொதோக் கேள்விக்கு விடை என்னால சொல்ல முடியாது.
கேள்வி :
2)என்னைப் போன்ற சாமானியர்கள் அரசுத் துறை கெஸ்ட் ஹவுஸ்களில் தங்க முடியுமா? என்ன ப்ரொசீஜர்?
பதில் :
எமது துறையைப் பொருத்த வரை பெரும்பாலான கெஸ்ட் ஹவுஸ்களை ஓய்வில்லம் என்பதைவிட ஆய்வு இல்லங்கள் எனலாம். அதாவது அடர் வனங்களில் ஆய்வுப் பணிகள் மற்றும் தணிக்கைகளை மேற்கொள்ள வரும் அலுவலர்கள் தங்கும் இடங்கள் அவை. பெரும்பாலானவை நூறாண்டுப் பழமை மிக்கவை. பொதுவாக அவற்றில் பொதுமக்கள் தங்குவதை ஊக்கப் படுத்துவதில்லை. காரணம் பல.
இருப்பினும் நட்புக்கு மரியாதை தந்தும் நண்பர்களின் கானகத் தங்கல் தாகம் தணிக்கவும் பலவித யோசனை மற்றும் தர நிர்ணயத்துக்குப் பின் நானே அழைத்துச் செல்வதும் உண்டு.
கொல்லான் :
கேள்வி :
எண்பத்து ஒன்பதுக்கு அப்புறம் தொன்பதுன்னு தானே வரணும்?ஏன் தொண்ணூறுன்னு வெச்சாங்க?
பதில் :
நல்ல கேள்வி. இதைப் போலவே எண்ணூறுக்கு அடுத்துத் தொண்ணூறு என்பதற்குப் பதிலாக தொள்ளாயிரம் என்று வருவதையும் கவனிக்கவும்.
ஒன்பது எனும் எண்ணுப் பெயருக்குத் ‘தொண்டு’ என்ற ஒரு வடிவமும் இருந்திருக்கிறது. தொல்காப்பியர் அச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஆயினும் தொள்ளாயிரம், தொண்ணூறு போன்ற எண்ணுப்பெயர் வடிவங்களை விளக்குவதற்குத் தொண்டு எனும் வடிவத்தை அடிச்சொல்லாகக் கொள்ளாமல் தம் காலத்தில் வழங்கிய ஒன்பது என்பதையே அடிச்சொல்லாகக் கொண்டு இலக்கணம் கூறினார். தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவற்றுக்கு தொண்டு > தொள் என அடிச்சொல் கொண்டு எளிமையாக விளக்கியிருக்கலாம். ஆனால் தம் காலத்து வழக்கான ஒன்பது என்பதை அடிச்சொல்லாகக் கொண்டு மிகுந்த சிரமத்துடன் விளக்கியுள்ளார். செ. வை. சண்முகம், எழுத்திலக்கணக் கோட்பாடு, ப. 220ல் இதைக் காணலாம்.
(நன்றி http://ve.bdu.ac.in:8080/tamil/mat/matt02/html/mat02001tap7.htm)
அமரபாரதி
கேள்வி :
பொரட்டாசியில அசைவம் இல்ல சரி! ஆனா சரக்கும் இல்லையா? வீட்டுல மட்டும்தானா, இல்ல வெளியிலயும் சைவமா சார்?
பதில் :
பொரட்டாசியில நான் ஒரு நன்னெறிக் கழகம். வீட்டில் காட்டில் நாட்டில் எங்கும்!
கேள்வி :
நாதாஸ்
தடுத்தாட்கொள்ளுதல் அப்படின்னா என்ன சார்?
பதில் :
சில பல காரணங்களால் ஒரு கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் அல்லது வெளியேற்றப்படுபவர்களைத் தாயுள்ளம்/தந்தையுள்ளம் கொண்டு அரவணைப்பதுதான் தடுத்தாட்கொள்ளுதல்.
கேள்வி :
நாஞ்சில் நாதம்
1)எட்டு அணி உண்டுண்ணு சொல்லுவாங்க (கரெக்ட்டா?)
பதில் :
தப்பு. ஏகப்பட்ட அணிகள் இருக்கு.
நமக்கு தெரிஞ்சது வஞ்சப் புகழ்ச்சி அணி.
”நமக்கு” அப்படினா?
கேள்வி :
வாய்ப்பாடி குமார்
மயில் எவ்வாறு இனப் பெருக்கம் செய்கிறது?
பதில் :
ஆண் மயிலும் பெண் மயிலும் சேர்வதன் மூலம்.
***********************************************************************************************************
Oct 31, 2009
சைபர் க்ரைம்
அடுத்த நாள் காலைல ஒரு சின்ன விஷயமா எக்மோர்ல இருக்கிற சைபர் கரைம் ஆபீஸ் போயிருந்தேன். விஷயம் நெம்ப சிம்பிள். ஒரு ஏழெட்டு மாசத்துக்கு முந்தி எனக்கு லேசா டிஸ்டர்பன்ஸ் தர்ர மாதிரி மெயிலெல்லாம் வந்துச்சு.
போலீஸ்ல தெரிஞ்ச பெரிய அபீஸர் காதில போட்டு வெச்சிருந்தேன். அவருதான் கூப்ட்ருந்தாரு. நுழை வாசலுக்கெதிர்லயே இருந்துச்சு அவரோட ஆபீஸ்.
அடுத்த நாளே லீவு முடிஞ்சு மலையேறிட்டேன். நெம்பச் சலிப்பா இருக்குது.
புத்துணர்வுக்கு என்ன பண்ணலாம்னு ஓசனையா இருக்குது.
புதுசா எதாச்சும் பண்ணணும். பாப்பம்.
****************************************************************************************************
Oct 27, 2009
கேள்வி பதில் மற்றும் சென்னை விஜயம்
Oct 24, 2009
பிரபல பதிவருக்கு உதவுங்கள்
பார்ட்டி குடுத்தற வேண்டியதுதான். ஆனா நிச்சயமா அந்த ஓட்டல்ல கெடையாது. அது இருக்கட்டும்.
இன்னும் சில சினிமா நண்பர்கள் அவருக்கு வாய்ப்பளிக்க ரெடியா இருக்காங்க. அதனால நிச்சயம் பின்வரும் கருத்தாழம் மிக்க, உணர்வு மற்றும் அறிவு பூர்வமான, நவரசங்களையும் வெளிப் படுத்தக் கூடிய டயலாக்குகளில் ஏதாச்சும் ஒண்ணைக் கூடிய சீக்கிரம் அவர் பேச வாய்ப்பிருக்குது. நீங்களும் இந்த மாதிரி டயலாக்குகள் இருந்தா அனுப்ச்சு வெய்ங்க. ப்ராக்டீஸ் பண்ண அவருக்கு வசதியாருக்கும்.
1) ஏய்
2) யெஸ் பாஸ்
3) யூ ஆர் அண்டர் அரஸ்ட்
4) சார் போஸ்ட்
5) டிக்கட்டுக்குச் சில்லறை சரியாக் குடுங்க
6) என்னய்யா நடக்குது இங்க?
7) காதல்ன்றது…
8) உன்னப் போல ஒரு சிலர் இருக்கிறதாலதான்யா எல்லாத்துக்குமே கெட்ட பேரு
9) தீப் பெட்டி இருக்கா சார்?
10) சிட்டி பூரா அலர்ட் பண்ணுங்க.
11) யாரப் பாத்து என்ன வார்த்த சொன்ன?
12) அவங்க என்னோட தெய்வம்
13) பொண்ணுங்களத் தெய்வமா மதிக்கிற நாடுடா இது
14) தலைவா
15) ம் அடிச்சு நொறுக்குங்கடா
16) இந்த மருந்த வேளா வேளைக்குச் சாப்பிடணும்
17) இப்ப அவர் இருக்கிற நெலையில அதிர்ச்சி தர்ர எந்த விஷயத்தையும் அவர்கிட்ட சொல்லிராதீங்க.
18) யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்.
19) எனக்கு அவன் வேணும்! உயிரோட வேணும்
20) உங்களைக் கையெடுத்துக் கும்படறேன்
21) இது மண்ணு இல்லடா பொன்னு
22) நான் சொல்றது சத்தியம்
23) கேஸ் ஒத்தி வைக்கப் படுகிறது
24) சைலேன்ஸ் சைலேன்ஸ்
25) லைசன்ஸ் இருக்கா? ஆர்.சி.புக் இருக்கா?
26) ஏய் த்ரீ நாட் டூ
27) உனக்கே இவ்வளவு திமிரு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்?
28) நான் சொன்னா சொன்னதுதான்
29) மச்சி
30) ஆத்தா
31) நிறுத்து
32) வேணாம் தல. அது பெரிய எடம்.
33) அதுக்கெல்லாம் மச்சம் வேணும்டா
34) ஹி ஹி
************************************************************************************************************
Oct 22, 2009
பதிவர்கள் பலவிதம்!
கொஞ்ச நாளைக்கு முந்தி சில பதிவருங்க நம்ப எடத்துக்கு வந்திருந்தாங்கல்லோ.
அட! வால் பையனுங்கூடி அதத் தொடரா எழுத ஆரமிச்சிருக்காருல்ல. அதான்.அந்தச் சந்திப்புல “பதிவர்கள் பலவிதம்” அப்படிங்குற தலைப்புல ஆய்வுக் கட்டுரை எல்லாரும் வாசிக்கோணும்னு முடிவாயிருந்துச்சு. சீனா அய்யா மட்டும் அவிங்க ஊட்டுக்கார அம்மிணி எழுதிக் குடுத்த கட்டுரையக் கொண்டாந்திருந்தார். அருமையான கட்டுரை!
ஆனாப் பாருங்க. அதுல என்ன ஒரு கொறையினு கேட்டாக்கா ஒண்ணு சொல்லுவேன்! அதாவது அவிங்க இப்பம் பதிவுலகத்துல இருக்குற பதிவுங்களை/விஷயங்களை மட்டும் பட்டியல் போட்ருந்தாங்க.
ஆனா நாம கேட்ருந்தது பதிவருங்க வகைகளப் பத்தி.
.அப்புறம் டிஸ்கஷன் போச்சு பதிவருங்களப் பத்தி.
இங்க பதிவருங்க டைப்புகளப் பத்திப் பேசுனது மட்டும் போடறேன். சந்திப்புல என்ன பேசுனாங்கங்கிறதும் உதாரணங்களும் வேண்டாமே?
(உண்ணம் ஒத்தடம் குடுத்து முடியலை. அதுக்குள்ள மறுக்காவும் டின் கட்டிக்க முடியுமா?)
சமையல் குறிப்புப் பதிவர்கள்
நெட்டுலயோ சமையல் பொஸ்தகங்களையோ ’சுட்டு’ சொந்த வார்த்தைகளில ‘தாளிச்சு’ப் பரிமாறிருவாங்க.
இவிங்க கொல தெய்வம் கூகிளாண்டவர்.
சமுதாய முன்னேத்திப் பதிவர்கள்
அப்பப்ப திங்க் பண்ணி சமுதாயத்த முன்னேத்த கடுமையா முயற்சி பண்ணிட்டு மறுக்காவும் தங்க வேலையப் பாக்கப் போயிருவாங்க. ”ரெட் சிக்னல்ல நிக்காம போனவனப் பாத்து எனக்கு அஞ்சு நிமிசம் எதுவுமே சாப்புட முடியாம போச்சு லெஃப்டல ஓவர் டேக் பண்ணுனவனப் பாத்து மூட் அவுட்டாயி உண்ணொரு “போத்தல்” அடிச்சேன்”கிற மாதிரி சமுதாய ஒணர்வு மிக்கவிங்க இவிங்க.
நெமபப் பொறுப்புணர்ச்சி மிக்கவிங்க இவிங்க.லேத், டிங்கரிங், பெயிண்டிங், ரிவிட், மாதிரியான வேலைக்கெல்லாம் ஏற்பாடு செய்வாங்க.
ஒண்ணுக்கு மேல பதிவுகள் வெசிருப்பாங்க. (ஒண்ணுக்குனா தப்பா நெனைச்சிராதீங்க! ஒரே ஆசாமி பல பதிவுகள் வெச்சிருப்பாங்கனு சொல்ல வந்தேன்). சொந்தமா எழுதுறதுக்கு ஒண்ணு. மத்தவிங்களத் திட்டுறதுக்கு ஓண்ணுனு இருக்கும். அனானியாய்க் கமெண்ட்டு போட முடியாத சீழ்நெலமையிலும் சாரி - சூழ்நெலமையிலும் கமெண்ட் மாடரேட் பண்ணியிருக்கிறப்போவும் திட்டுறதுக்காகவே ஒரு அய்டி கிரியேட் பண்ணி இருக்குற புண்ணியவானுங்க இவிங்க.
“காலைல எந்திரிச்சேன். காப்பி குடிச்சேன். கரகரனு வந்துச்சு. ஆபீஸ் போனேன். அங்கியும் வந்துச்சு”. அப்படினு ஆனந்தரங்கம்பிள்ளைனு நெனைசுக்கிட்டு ”அபூர்வ தகவல்களை” அள்ளி வீசுவாங்க. (ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பு பத்தித் தெரியாதவிங்களுக்கு சந்திரமௌளீஸ்வரன் விளக்கம் தருவாரா?)
டபுள் ஆக்ட் பதிவர்கள்
ஒரே பதிவரு ஒரே பிளாக்குல ரெண்டு பேர் பேர்ல எழுதுவாங்க. மாறி மாறி அவிங்களே பின்னூட்டமும் போட்டுக்குவாங்க. நெம்ப டமாஸா இருக்கும்.
டூப்ளிகேட் பதிவர்கள்
ஒரிஜினலா எழுத லேசா கஷ்டம் இவிங்களுக்கு. மித்தவிங்க எழுதுறத லேசா மாத்தி எழுதிக்குவாங்க. கேட்டாக்க எதிர்ப் பதிவும்பாங்க. ”என்னைய நம்பி இருக்கிறவிங்கள் நாம ஏமாத்தக் கூடாது பாத்தீங்களா?” அப்படிம்பாங்க. ஒரு கான்ஸப்ட் ஹிட் ஆயிருச்சுனா அத ஒடனடியா லபக்கீருவாங்க.
பச்சோந்திப் பதிவருங்க
பிளாக்குல ஆகா ஓகோனு முன்னேத்தக் கருத்துங்கள திருகலான நடையில எழுதுவாங்க. எழுதுன ஈரம் காயறதுக்குள்ள கூசாம சிபாரிசுக்கும் போவாங்க.
இப்பல்லாம் சரோஜாதேவி புக்ஸ் அதிகமா இல்லைங்கிற கொறைய இட்டு நெரப்புறவிங்க இவிங்க. மண்டை கிண்டைனு சரளமா எழுதுவாங்க. பீர்ல 3000, 5000 அப்படினு இருக்கிற மாதிரி நெம்பர் போட்டு விட்டு ஆட்டுவாங்க.
நாட்டாமைப் பதிவர்கள்
பதிவுலகத்துல எங்க எப்பச் சண்டை சாடி நடந்துச்சுனாலும் இவிங்களுக்குக் கொண்ட்டாடம்தான். ஒடனடியாப் போயி அதிரடியா நாட்டாமை பண்ண ஆரமிச்சிருவாங்க. சமயத்துல திருக்குறள் எல்லாம் கோட் பண்ணுவாங்க.
எனக்கு நீ ஒனக்கு நான் அப்படிங்கிற உயரிய கோட்பாடு இவிங்களது. இவிங்களுக்கு ‘மொய்க்கு மொய்ப் பதிவர்கள்’னு உண்ணொரு பேரும் இருக்குது.
எதப் பத்தி வேணும்னலும் எழுதுவாங்க. பறவைக் காச்சலா, பணியாரம் சுடுறதா, கேட் வாக் பத்தி எழுதுறதா கேக் செய்யிறதப் பத்தி எழுதுறதா எத வேணும்னாலும் எழுதுவாங்க. டவுன்லோடு இருக்கறவரைக்கும் இவிங்க அதி மேதாவிங்கதான்.
மெனி இன் ஒன் பதிவர்கள்
பர்மா பஜார் பாஷையிலும் எழுதுவாங்க பண்டிதன் மாதிரியும் எழுதுவாங்க. கொங்குப் பேச்சிலும் எழுதுவாங்க கொமுரிகளப் பத்தியும் எழுதுவாங்க.
இவிங்களத் தவிர உண்ணம் நெம்பப் பேரைப் பத்தி டிஸ்கஷன் நடந்துச்சு.
இந்தச் சந்திப்புலக் கவிதை, அரசியல் பதிவர்களைப் பத்தியும் மற்றும் காமெடி பீஸ்களைப் பத்தியும் எதுவும் பேசலை!
****************************************************************************************
Oct 20, 2009
ஏர் பேக்
அது ஒரு கார் தயாரிப்பு நிறுவனம். கார்கள் தயாரிப்பில் பலவித உத்திகள்ப் புகுத்தி வரும் நிறுவனம் அது. விபத்துக்கள் ஏற்பட்டால் காரினுள் இருப்பவர்களுக்கு அடி படாமல் இருப்பதற்காக மேலை நாடுகளில் கையாண்டு வரும் ஒரு நவீன உத்தியைத் தனது தயாரிப்புகளிலும் புகுத்தி இந்தியக் கார்களுக்கும் அதை அளிக்க விரும்பியது அந்நிறுவனம்.
அதாவது கார் எதாவது விபத்தில் எதன் மீதாவது மோதிவிட்டால் ஏர் பேக் எனப்படும் காற்றடைத்த பைகள் முன் சீட்டில் அமர்ந்திருப்பவர்களைச் சுற்றி புஸ்ஸெனப் பெரிதாக்ச் சுழ்ந்து காயம் ஆகாமல் காப்பாற்றும் டெக்னாலஜி.
அதைப் பரீட்சை செய்து டெமோ மூலம் உறுதிப் படுத்திக் கொள்ள அந்றுவனம் நினைத்தது. ஏற்கனவே பல முறை டம்மி பொம்மைகளை வைத்து வெற்றி கண்டாயிற்று. இப்போது உண்மையிலேயே ஒருவர் ஓட்டி எதன்மீதாவது மோதிக் காயமில்லாமல் காரோட்டுபவர் தப்புகிறார் என்பதைப் பரீட்சை செய்ய விரும்பியது அந்நிறுவனம்.
அதன்படி அந்நிறுவனத்தில் ஒருவர் வேகமாக 70 கிமீ வேகத்தில் அக்காரை ஓட்டி வந்து ஒரு செயற்கைத் தடுப்புச் சுவரில் மோதவேண்டும். அவர் காயமில்லாமில்லாமல் வெளிவருவதை உறுதி செய்ய வேண்டும்.
எல்லாம் சரி. அதற்கெனவே ஏர் பேக் பொருத்தப்பட்ட கார் ரெடி. தடுப்புச் சுவரும் ரெடி. இம்பேக்ட் அனலைசர், கொல்லிஷன் ஃபேக்டர் டிடக்டர், ஸ்பீட் வெர்ஸஸ் டெமேஜ் சிந்தஸைஸர் இன்னும் என்னெனேனவோ மீடர்கள், கருவிகள் எல்லாம் ரெடி. ஸ்பெஷல் இன்சூரன்ஸுக்கும் ஏற்பாடு ஆயிற்று. ஆம்புலன்ஸ், டாக்டர்கள், முதல்தரமான மருத்துவமனையும் ரெடி.
யார் ஓட்டிப் போய் இடிப்பது?
எவருமே முன்வராத அந்நிலையில் அந்த இளந்தாரி எஞ்சினீயர் முன் வந்தார்.
சகல முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு, அந்த எஞ்சினீயர் அந்த ஸ்பெஷல் காரை 5 வது கியரில் 70 கி,மீ வேகத்தில் வந்து டமார் என்று என்று அந்த செயற்கைச் சுவரில் மோதினார்.
வெற்றி! ஏர் பேக் கச்சிதமாக வேலை செய்தது. முன்பகுதி அப்பளமாய் நொருங்கிய அந்தக் காரிலிருந்து துளிக் காயமில்லாமல் வெளியேவந்தார் அந்த எஞ்சினீயர்.
பயங்கரமான கர ஒலி.
மரண பயமில்லாம அந்த இன்சினீயர் இருப்பதை எல்லாரும் பாராட்டினார்கள்.
அதெல்லாம் செர்த்தான். அந்த இஞ்சினீயரோட அப்பன் ஒரு பயந்தாங்குளிப் பண்டிதன்.!
******************************************************************
Oct 18, 2009
மதுவும் மாமிசமும் பார்ட் II

மது அருந்துதல் என்றதொரு பழக்கம் ஆதிகாலம் முதலே இருந்து வந்திருக்கிறது. ’சோம பானம்’ ’சுராபானம்’ என்ற பெயர்கள் மதுவுக்கு உண்டு.
சங்க இலக்கியங்களிலே ‘தேறல்’ எனச் சொல்லப் படுவது மது.
”தேட்கடுப்பன்ன நாட்படுந்தேறல்” என்று வரும் வரிகள் கவனிக்கத் தக்கன. தேள் கொட்டினால் எப்படி இருக்குமோ அதைப்போல நாவில் பட்டவுடன் சுரீர் என இருக்கும் நாள்பட்ட மதுவுக்கு என்றுமே கிராக்கிதான். மேலைநாட்டு மதுக்குப்பிகளில் 50 years old 70 years old என்றெல்லாம் போட்டிருப்பதைப். பார்த்திருக்கலாம்.
கபிலரும் சிற்றரசரான பாரியும் ஒன்றாக மது அருந்தியும் மாமிசமும் உண்டும் மகிழ்ந்திருந்தனராம். புறநானூறுப் பாடல் 113 இதைச் சொல்கிறது. ஒளவையாரும் அரசன் அதியமானும் ஒன்றாக மது அருந்தியிருக்கிறார்கள் எனப் புறநானுற்றுப் பாடல் 235 விவரிக்கிறது.
”சிறியகட் பெறினே, எமக்கீயும்;
மன்னேபெரியகட் பெறினே,
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே”
என்னும் வரிகளைப் பாருங்கள்! ஔவையார் மதுவைப் பருகியதைச் சொல்லியிருக்கிறார்!
சிறுபாணாற்றுப்படை மதுரைத் தெருக்கள் கள்ளால் நனைந்திருந்ததைப் பற்றிப் பேசுகிறது.
ஈத்தைல் ஆல்கஹால் என்று அழைக்கப்படும் திரவமே பெரும்பாலும் மதுக்களில் போதையை அளிப்பதாகும். CH3CH2OH என்பது இதன் மாலிக்யுலார் ஃபார்முலா. பலவிதமான அல்லோபதி மருந்துகளிலும் ஈத்தைல் ஆல்கஹால் சிறிய அளவில் சேர்க்கப்பட்டிருக்கும்.
பிரசவ காலங்களில் தாய்மார்களுக்குச் சில நாடுகளில் மது அளிக்கப்படுவதும் உண்டு.
அளவுக்கு மிஞ்சி மது அருந்துவது கெடுதல் ஆனால் மிதமான அளவில் மது பருகுவது ஜீரணத்தையும் ஊக்குவிக்கும். ஒரு மருந்தைப் போல உட்கொள்ள மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். மிதமாக ஆல்கஹால் உட்கொள்ளுவது இத்யக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதாகவும் ஓர் ஆய்வு சொல்கிறது. (http://alcoholism.about.com/cs/about/f/faq17.htm பார்க்கவும்)
மிக அதிகமான உடல் வேதனையை மறக்கச் சிலர் மது அருந்துவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.
கேரளாவில் விற்கப்படும் சில மருந்துகள் ’அரிஷ்டம்’ என அழைக்கப் படுகின்றன. அவற்றிலேயும் போதை தரும் வஸ்துக்கள் உள்ளன.
பெரும் கவிஞர்களும் கலா ரசிகர்களும் மது அருந்துகிறவர்களாக இருந்திருப்பதைக் காண்கிறோம். உமர் கையாமின் கவிதையைக் கவிமணி மொழிபெயர்த்திருக்கிறார். அதில் ஒரு பாடல்
”வெயிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றற் காற்றுண்டு
கையிற் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு”
எனச் சொல்லி வாழும் சொர்க்கம் இதுவேயெனச் சாதிக்கிறது!
மாமிசம்

Canine teeth என அழைக்கப்படும் கோரைப் பற்கள் மாமிச பட்சணிகளுக்கே உரித்தானவை. மனிதருக்கும் அவை உண்டு. எனவே மனிதர்கள் மாமிசம் சாப்பிடும் இனத்தவர் எனச் சொல்வோரும் உண்டு.
ப்ரோட்டீன் மற்றும் கொழுப்பு அசைவ உணவுகளில் அதிகம் உண்டு.
அமினோஅமிலங்கள் அசைவ உணவிலே மட்டுமே உண்டு.
இறைச்சி உண்ணும் கலாச்சாரத்தைப் பல சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற மன்னன் தனக்கு மதுவையும் மாமிசத்தையும் ஊட்டிவிட்டதாக ஔவையார் பாடியிருப்பதைப் பாருங்கள்.
“மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன் மரபின் ஊனதுவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி..."
மேற்கு வங்கத்தில் மாமிசம் புசிக்காதோரும் மீனை உண்பதாக எனது நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
உடல் பருமன் கிடைக்கவும் நோயாளிகள் விரைவில் தேறிடவும் அசைவ உணவு பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகிறது. மேலை நாடுகளில் சைவ உணவு மட்டும் உட்கொள்வோர் மிக மிகக் குறைவு.
இறைவனால் படைக்கப்பட்ட இதர உயிரினங்கள் யாவும் மனிதனுக்கு உணவாகவே என ஒரு கருத்தும் நிலவுகிறது.
பல்லுயிர்ச் சமநிலைக்கு அசைவ உணவுப் பழக்கம் துணையாய் உள்ளது என்றும் சொல்வார்கள்.
(நான் சென்னையில் விவேகானந்தாக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும்போது சில நண்பர்கள் லயோலாக் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்தனர். அக்கல்லூரியில் பல மெஸ்கள் இருக்கும். அதில் “E Mess” (European Mess) மிகவும் பிரபலம். பல நாட்கள் அங்கு அசைவ உணவு அருந்தி மகிழ்ந்திருக்கிறேன்.
அதேபோல சினிமா ஷூட்டிங்கிற்கு வரும் சமையல்காரர்கள் சமைக்கும் அசைவ உணவு அற்புதமாயிருக்கும். ஒரு முறை ஸ்நேகா நடித்த படத்தின் மதிய உணவு இடைவேளைகளில் அவருடன் அமர்ந்து உணவு உண்ணும் வாய்ப்புக் கிடைத்தது. அருமையான வாசனை! வாயில் உமிழ்நீர் ஊற வைத்திடும் பாங்கு அடடா! அற்புதமாய் இருந்தது!)
என்ரா இது! நெம்ப நிதா எளுதிப் போட்டே அப்படீங்குறீங்களா?
பொரட்டாசி முடிஞ்சாச்சல்லோ!
***************************************************************************
Oct 13, 2009
Oct 10, 2009
பண்டிதன் கடிதம் தொடர்பான ஒரு கடிதம்
திரு. நாதாஸ் அவர்களின் கடிதம்
வணக்கம் சார், நீங்க கேலி, நையாண்டியா போட்ட பதிவ ஏன் தூக்கணும் ? உண்மைய தானே சொன்னீங்க. ஜாலியா படிக்கப்பட வேண்டிய பதிவு அது. அந்த பதிவு நீக்கரதால எதோ உங்க பக்கம் தப்பு என்கிற மாதிரில்ல இருக்கு :( எதோ சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டேன். அதிகபிரசங்கி தனமா இருந்தா மன்னிச்சுருங்க :D அன்புடன்,நாதஸ்.
அன்பார்ந்த திரு. நாதாஸ்!
உங்களின் கடிதம் கண்டேன்.
பதிவுகளை நீக்கியது தொடர்பாக உங்கள் கடிதம் போலவே பலரும் ,ஈமெயிலிலும், பின்னூட்டங்களிலும் போனிலும் தெரிவித்திருந்தார்கள்.
அதற்கான சிறு விளக்கம் கீழே.
என்னுடைய பணி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் முனைப்புடனும் கான்சன்ட்ரேஷனுடனுடனும் உடனடியாக – சரியான முடிவுகள் - எடுக்கவும் வேண்டிய ஒரு க்ரிடிக்கல் பணி.
இதனைச் செவ்வனே செய்ய மனம் மிக லேசாகவும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம். எப்பொழுதுமே ஜாலியாகவும் சந்தோஷமாகவும் நானும் இருந்து மற்றவர்கலையும் அப்படியே இருக்க வைப்பதால் எனது அகம் மற்றும் புற வாழ்வு தெளிந்த நல் நீரோடைபோல் செல்கிறது.
இந்நிலையில் என் சொல்லால், எழுத்தால், மற்றவர்கள் புண்படுவதை நான் எப்படி அனுமதிக்க முடியும்? மேலும் அவர்களது சுடு சொற்கள் எனது அன்றாட நிகழ்வுகளில் லேசான சலனத்தை ஏற்படுத்துவதையும் நான் விரும்பவில்லை. அது எனது அலுவலில் மிக மிகக் குறைந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவும் மனம் விரும்பவில்லை.
மேலும் நான் விவாதங்களில் என்றுமே நம்பிக்கை இல்லாதவன். காரணம் அது நேர விரயத்துக்கும் மனக்கசப்பைக் கூட்டுவதற்குமே பயன்படும். நமது கருத்துக்களை அவர்கள் ஏற்கப்போவதுமில்லை, அவர்கள் கருத்துக்களை நாம் ஏற்கப்போவதுமில்லை எனும் சூழ்நிலையில் விவாதத்திலிருந்து முதலில் ஒதுங்குவது நானாகவே இருந்து வந்திருக்கிறது. இதை நான் தோல்வியாகவோ பின்னடைவாகவோ ஒருபோதும் கருதியதில்லை. (சமீபத்தில் முதுமலையில் நடந்த பதிவர் சந்திப்பின்போதுகூட எனது கருத்துக்கு மாறாக ஒரு பதிவர் வாதத்தை எடுத்து வைத்தபோதும் சிரித்துக்கொண்டே நாசுக்காய் விவாதத்திலிருந்து விலகினேன்.)
After all மன மகிழ்ச்சிக்காகத்தானே எதையும் செய்ய வேண்டும்? மற்றவரைக் காயப் படுத்த அல்லது நாமே காயம்பட்டுக்கொள்ளவா பதிவெழுதுவது?
என்னுடைய ப்ரொஃபைல் வாசகத்திலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே! “வாழ்க்கையை ரசனையோடு கழிக்க விரும்புகிறேன்” என்று!
இப்போது மனம் மிக லேசாக இருக்கிறது.
******************************************************************
Oct 9, 2009
பதிவுகள் நீக்கப்படுகின்றன
Oct 4, 2009
“குவார்ட்டர்” லி எக்ஸாம்
“குவார்ட்டர்” லி எக்ஸாம் கேள்வித்தாள்
(கடினமான கேள்விகள் என்பதால் பதில்களும் தரப்பட்டிருக்கின்றன)
அதிகப்படி மதிப்பெண்கள் : 180
தேர்வுக் காலம்: அந்தி சாயும் நேரம்
1
சமீபத்தில் நடைபெற்ற முக்கியமான பதிவர்கள் சந்திப்பு எங்கு நடைபெற்றது?
மதிப்பெண் 1
குன்னூர் மற்றும் முதுமலை
2
அதில் பங்கு பெற்றோர் யாவர்?
மதிப்பெண் 1
1) தமிழ்மணம் காசி
2) சீனா ஐயா
3) ஜ்யோவ்ராம்சுந்தர்
4) வால்பையன்
5) ஹி ஹி
3
அழைக்கப்பட்டு வராதோர் யாவர்? அதற்கான காரணம் என்ன?
மதிப்பெண் 1
1) மங்களூர் சிவா
2) கோவாலு மாப்ள
3) நாதாஸ்
நெம்பத் தூரம் என்பதால் வர இயலவில்லை
4
ஏற்கனவே ஒரு புதிர் போட்டி வைத்து ஜெயித்தவிங்களுக்கான டூரா இது?
மதிப்பெண் 1
அய்யே! இது வேற. அவிங்களுக்குத் தனியா உண்ணொரு டூரு இருக்குது.
5)
டூர்ல கலந்துக்கிறவிங்களுக்கு என்னமோ வினாப்பட்டியல் (Questionnaire) அனுப்ச்சாராமே? அது என்ன?
மதிப்பெண் 1
வினாப் பட்டியல்
(தகவல்கள் சுற்றுலா ஏற்பாடுகளுக்காக மட்டுமே!
வெளியிடப் படமாட்டா)
1
சைவமா அல்லது அசைவமா?
அசைவம் எனில் அசைவத்தில் பிடித்த உணவு மீன்/கோழி/மட்டன்/ முட்டை/அனைத்தும்
2 பிடித்த காய் கறி?
3தாக சாந்தி உண்டா?
4உண்டு எனில் பிடித்த பிராண்ட்?
5அதில் கலக்குவத்ற்கு உகந்த மிக்ஸிங்?
6கொறிக்க?
௭ புகை பிடிப்பீர்களா?
ஆம் எனில் என்ன பிராண்ட்?
ஒரு நாளைக்குச் சராசரியாக?
8ரம்மி தெரியுமா/பிடிக்குமா?
9கரடு முரடான மலைப் பாதைகளில் நடந்து பழக்கம் உண்டா?
(இல்லையென்றாலும் பரவாயில்லை. மாற்று ஏற்பாடுகள் உள்ளன.)
10இதய நோய்/ ரத்த அழுத்தம்/ சர்க்கரை போன்ற நோய் ஏதேனும் உள்ளதா?
(இருந்தாலும் பரவாயில்லை. இக்கேள்வி தகவலுக்காக மட்டுமே)
11தொடர்ச்சியாக ஒரே சமயத்தில் நீங்க நடந்து கடந்த அதிக பட்ச தூரம் எவ்வளவு கிமீ?
12இந்தச் சுற்றுலாவில் தாங்கள் கலந்து கொள்ளும் நோக்கம்?
13ஏதேனும் கூடுதலாகச் சொல்லவிரும்புகிறீர்களா?
6)
கலந்துகிட்டவிங்க அனுப்பின பதில் என்ன?
மதிப்பெண் 0
ரகசியம்
7)
டூர் தொடர்பாக கலந்துகொண்டவிங்களுக்கு அனுப்பப்பட்ட செக் லிஸ்ட் அளிக்கவும்
மதிப்பெண் 1
CHECK LIST
Important
Ticket
Cash
Id Card
Medicines
Anasin
Eldopar
Sugar tablet
Miscelaaneous
Lap top
Air Pillow
Torch
Transistor with new cells
Mug
Valet
Shoulder bag
Water bottle
Cloths
Towel
Banian
Jatti
Lungi
Dresses
Porvai
Kerchief
Cosmetic items
Paste
Brush
Shaving items (razor, shaving soap and brush)
Soap
Shampoo
Comb
Powder Small mirror
Belt
Cell phone
Railway guide
Pen
Scribbling pad
Route map
Cell phone
Magazines
Small lock and key
Instructions to family members
(vary from time to time)
8)
டூர் நடைபெற்ற நாட்கள் யாவை?
மதிப்பெண் 1
அக்டோபர் 2 முதல் அக்டோபர் 4 முடிய
9)
டூர் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் படம் வரைந்து பாகங்கள் குறிககவும்
மதிப்பெண் 0
அப்புறமா
10)
டூரில் கலந்து கொண்டவர்களின் அடிப்படைத் தகுதி என்ன?
மதிப்பெண் 93
தர்ம அடி குடுக்காம இருந்தது
11)
ஒரு திருக்குறள் சொல்லவும்
மதிப்பெண் 80
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண (மற்றவர்க்கு)
நன்னயம் செய்து விடல்
மொத்தம்
மதிப்பெண் 180
********************************************************************************
Sep 30, 2009
பச்சைத்
பச்சை அப்படினாக்க என்னங்க? என்ரா இது? இது கூடியுந் தெரியாம நீ எல்லாம் ஒரு பிளாக்கரானு சீராடீறாதீங்க.
பச்சைங்கிறது ஒரு கலருனுதான் நெனைச்சிகிட்டிருந்தேனுங்க. அப்பறம் பாத்தா நெம்பக் கொளப்பமாயிப் போச்சு!
உப்புச காலத்துல வெந்தண்ணி வாக்கவே மாட்டன் நானு. குளுந் தண்ணிதான் வாத்துக்குவேன். “வெளாவ வேண்டாங்ளாங்? பச்சத் தண்ணியே வாத்துக்கறிங்ளாங்?” அப்படினு கேட்டுப் போட்டு குளுந் தண்ணியக் கொண்ண்டாந்து அண்டாவுல ஊத்துறா லதா. பின்ன ஏனுங்க குளுந்தண்ணியப் பச்சத் தண்ணி அப்பிடிங்கிறாங்கோ?
“வெரதம் இருக்குறப்போ பச்சத் தண்ணி பல்லுல ஊத்த மாட்டன்” அப்பிடீன்னாரு வெரதம் இருக்குற ஒருத்தரு,! தண்ணி பச்சக் கலர்லயா இருக்குது?
செரி அத உடுங்க! ஒருத்தர் ஊட்டுக்குப் போயிருந்தேன். அவிங்க கொளந்த நடந்த வாக்குல ஒண்ணுக்கிருந்துகிட்டே ரூம்பச் சுத்திச் சுத்தி வருது. அவிங்கம்மாளுக்கு நெம்ப நிதாயிருச்சு.
“அய்! இவ பெரியவளான பெரிய சித்திரக் காரியா அல்லாட்டி ஃபேஷன் டிஸைனரா வருவா! என்னமா டிஸைன் டிஸைனாக் கோலம் போடுறானு?’ ஒரே சந்தோஷமாயிருச்சு!
நானு, ”என்னங்க இது புள்ளைக்கு நல்ல பளக்க வளக்கம் சொல்லித் தராம இப்புடிக் கெடுக்குறீங்களேனு?” கேட்டுப் போட்டன். அவிங்களுக்குச் செரியான கோவம். ”பச்சக் கொளந்தைகள ஊக்குவிக்காம தடுக்குற நீங்கல்லாம் மனிசனானு?” தகலார் பண்ண ஆரமிச்சிட்டாங்க.
அது இருக்கட்டும். அட்டுக் கொளந்தயப் பச்சக் கொளந்தைங்கிறாங்களே? கொளந்த பச்சையாவா இருக்குது? அது போட்ருந்த துணி வேணாப் பச்சையாயிருந்துது.
நானு சோத்துக்குச் சின்ன வெங்காயம் கடிச்சுக்குவேன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன், http://lathananthpakkam.blogspot.com/2008/07/blog-post_24.html இந்தப் பதிவுல சின்ன வெங்காயத்தோட மகிமைகூடச் சொல்லியிருக்கேன்.
என்ர பெரியமாகிட்ட வெங்காயம் கேட்டாப் ”பச்ச வெங்காயம் வேணுமா இல்லாட்டி வணக்கித் தருட்டுமா?”னு கேக்குது.
வெங்காயம் ஒரு மாதிரி பிரவுன் கலர்ல தானுங்க இருக்கும்/ அப்புறாம் ஏனுங்க பச்ச வெங்காயம் அப்படிங்கறாங்கோ?
அது இருக்கட்டும். உலகத்தோட புராதனத் தொழில் பண்ணுற ஆரையாச்சும் பத்திச் சொல்றப்போ ”பச்சைத்” அப்படினு அடைமொழி குடுக்கிறாங்களே? ஏனுங்கோ? அவிங்க பச்சையாவா இருக்காங்க? அல்லாட்டி அவிங்ககிட்ட எதாச்சும் பச்சைக் கலர்லயா இருக்கும். ஒரே கொளப்பமா இருக்குதே?
நம்பளுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் செரியான பொய் பேசுவாரு. அவரு பேரெல்லாம் எதுக்கு? அவரப் பத்திச் சொன்னா ”அவரா? அவரு பேசுறதெல்லாம் பச்சைப் பொய்யாச்சே!?” அப்பிடிங்கிறாங்க! ஏனுங்க பொய்க்குக் கலரு இருக்குதா? இருந்தாலும் இருந்துட்டுப் போகுட்டும். பச்சப் பொய்னு ஏனுங்க சொல்றாங்க?
“உங்கூரு எது திருச்சூரா?”னு கேட்டுப்போட்டேன். வந்துச்சு பாருங்க அவுருக்குக் கோவம். “ஞான் பச்சத் தமிழனானு!” அப்படினு சத்தம் போட்றாரு. ஏனுங்க தமிழு பச்சைக் கலர்லயாங்க இருக்குது?
இதப் பதிவிடுறதுக்கு முந்தி அப்பநாய்க்கம்பாளையம் அரங்க. முத்துச்சாமி அய்யாகிட்டக் காமிச்சேன்.
“பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்” என்று மாலவனின் திருமேனியெழிலைப் பாடிப் பரவசமாகும் வரிகளிலே மலை பச்சையாயிருக்கிறதென்று உள்ளதேயெனக் கேட்காமல் விட்டீரே?
”முதலில் பச்சையாய் எழுதுவதை நிறுத்தும்!” அப்படினு காட்டமாச் சொலிட்டு மறுக்காவும் Dick அப்பிடிங்கிற தடிமனான லத்தீன் அமெரிக்கப் பொஸ்தகத்த வாசிக்க ஆரமிச்சிட்டாரு.
ஏனுங்க என்ர எழுத்துப் பச்சையாவுங்களா இருக்குது?
************************************************************************************************
Sep 26, 2009
பிரபலபதிவர் நடித்த படம்
Sep 25, 2009
மோஷன்
படிச்சுப் பாருங்க! நீங்களும் களிம்பு அனுப்புங்க. பிரசுரம் ஆவுற களிம்புகளுக்கு ஒரு பாய் அனுப்பி வெக்கறேன். பிறாண்ட வசதியாயிருக்கும்ல? சாம்பிளுக்கு ஒண்னை நானே ஆரமிச்சு வெக்கிறேனே.
குசும்பன் அப்படிங்கிறவர் (http://kolaiveri.blogspot.com/) “அப்ப லூஸ் மோஷன் ஆனா என்ன வரும்? ஹிந்தியா? இல்ல ஸ்லோமோஷன் ஆனா என்னா வரும்?” அப்படின்னு கேட்ருக்கார்.
இப்ப டீப்பாப் பாப்பம். மோஷன் அப்படின்னா என்ன? நகர்ரது. அதாவது வாய்க்குள்ளாற போற சமாச்சாரங்க நகந்து நகந்து கடேசீல வெளிய வர்ரதால மோஷன் அப்படீன்னு பேரு வந்திருக்குமா?
அப்ப நியூட்டன் அப்படிங்கிறவரு “Laws of motion” அப்படின்னாரே? (நியூட்டனோட blog address கேட்டு ஓரியாடப் படாது)
எந்த ஒரு வார்த்தைக்குமே எதிர்ப் பதம் ஒண்ணு இருக்குமில்லே? அப்ப லூஸ் மோஷனுக்கு எதிர்ப்பதம் டைட் மோஷனா?
சரி! மோஷன் பிக்ச்சர் அப்படிங்கிறாங்குளே? என்ன அர்த்தம்? மோஷன் சம்மந்தமான படங்களா?
லூஸ் மோகன் அப்படின்னு ஒரு நடிகர் இருக்காரே அவருக்கும் லூஸ் மோஷனுக்கும் சம்மந்தம் ஏதாச்சும் இருக்குமா?
சிலப்போ சினிமாவுங்கள்லே சவால் வுட்டுட்டுக் கதாநாயகன் போவுறதை ஸ்லோ மோஷன் அப்படிங்கிறாங்களே? ஸ்லோவா மோஷன் போறதைத்தானே ஸ்லோ மோஷன் அப்படிங்கணும்?
ஒரு ”முக்கிய” பிரச்சினை பத்திப் பாப்பம். No confidence motion சபையில நிறைவேறுச்சு அப்படிங்கிறங்களே... மோஷனுக்கு எதுக்கு கானிஃபிடன்ஸும் நோ கான்ஃபிடென்ஸும்?
இப்ப ஓரளவு தெளிவாப் பேசி வெளிக்கியிருக்கேன்னு நெனைக்கிறேன். பாப்பம் களிம்பு எப்படி வேலை செய்யுதுன்னு! நீங்களும் களிம்பு அனுப்புங்க! பிறாண்டுறதுக்குப் பாய் ரெடி!
************************************************************
Sep 18, 2009
மதுவும் மாமிசமும்
(கட்டுரையின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு எளிமையான உரைநடை பின்பற்றப் படுகிறது.)
மனிதனின் சுய நினைவை இழக்கச் செய்வது மது.
மது பருகியவன் தன்னிலை இழக்கிறான். பெரும் குற்றச் செயல்களுக்கான தற்காலிக மனத் துணிவைத் தருவது மதுவே. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்பது உண்மைதான். மதுவாலே தங்களது செல்வதத்தை இழந்தவர்கள் பலர். இன்னும் சில நெருங்கிய நண்பர்கள் தங்கள் வேலையையே இழந்து நிற்கிறார்கள்.
குடித்த ஒருவன் மற்றவரிடம் பேசும்போது நாசூக்கில்லாமல் நடந்து கொள்ளுவதையும் மற்றவரைப் புண்படுத்துவதையும் நாம் பார்க்கிறோம்.
சாதாரண மனோநிலையில் செய்யத் துணியாத காரியங்களியும் குடித்தவுடன் செய்யும் மனத் துணிவும் சிலருக்கு வந்து மேலும் சமுதாயத் தீமமைகள் செய்ய ஆரம்பிப்பதும் நடக்கிறது.
குடிக்கக் காசில்லாதபோது அதற்கு அடிமையானவர்கள் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டுப் பணம் சம்பாதிக்க முயற்சிப்பதும் ஆங்காங்கே நடக்கிறது. வீட்டிலுள்ள பொருட்களை அடமானம் வைக்கவோ விற்கவோகூடச் சிலர் தயங்குவதில்லை.
சில குடிகாரக் கணவர்கள் தமது குடும்பத்தினரைக் கொடுமைப்படுத்துவதும் நடைமுறையில் இருக்கிறது.
குடிக்கின்ற அறிவாளியைக் கூட குடிக்காத முட்டாள்கள் பரிகசிக்கும் விபரீதமும் நடக்கிறது.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதாலே அதிகம் விபத்துக்களும் நடக்கின்றன.
பலவிதமான வியாதிகளும் குடியாலே வருகின்றன. புற்று நோய், அல்சர் போன்றவையும் வரலாம் என்கின்றனர்.
மேலும் குடிக்கிற போது நொறுக்குத் தீனியாக எண்ணையில் பொறித்தனவற்றை அதிகமாகச் சாப்பிடுவதால் உடலில் தேவையாற்ற கொழுப்பும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
மாமிசம்
’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். அப்படியிருக்க உயிர்வதை செய்து விலங்குகளையும் பறவைகளையும் உண்ணலாமா? ஜீவ காருண்யத்துக்கு அவை எதிரானதல்லவா?
தாங்கள் வாழும் உரிமை அவற்றுக்கில்லையா? அவை கொல்லப் படும்போது எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்?
திருவளுவரின் கொல்லாமை என்ற அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள்.
மாமிசத்தில் உள்ள ப்ரோட்டீன்களில் உள்ள அமினோ அமிலங்கள் காய்கறிகளில் கிடையாது. அந்த அமினோ அமிலங்கள் மூர்க்க குணத்தை உண்டாக்க வல்லவை.
அசைவம் என்பது என்ன? பிராணிகளின் இறந்த உடல்களை உண்பதுதானே?
முட்டை என்பது பிறக்கப் போகும் பிஞ்சு உயிர். ஒளி பிறக்கும் முன்பே அணைத்தல் பாவமல்லவா?
”செரி செரி! என்ரா ஆச்சு இவனுக்கு?”னு நெம்ப ஓசிக்காதீங்க. உண்ணஞ் சிலபேரு, அசைவத்துக்கு ஆதரவாப் பினூட்டம் போட ஆரமிச்சிராதீங்க.
”பின்ன என்னாச்சு ஒனக்கு? நெம்ப நிதா இப்புடி எளுதியிருக்கே!” அப்புடீங்கிறீங்களா? ஹி ஹி!
பொரட்டாசி பொறந்திருச்சல்லோ!
*****************************************************************************
.
Sep 15, 2009
அணி
லேசா மழை வேற தூறிகிட்டிருந்துச்சா? தமிழய்யாவுக்கு ஒரே சந்தோஷமாப் போயிருச்சு. “வாரும்! வாரும்! உம்மை வரவேற்க வான்மழையே வந்து கட்டியம் கூறிடுவதைப் பாரும் பாரும்” அப்படீனு நெம்பகக் களேபாரமா வரவேத்தாரு.
“போங்கய்யா! மழ தம்பாட்டுக்கு வருது. என்னைய வரவேக்கப் பேயுதுனு ஒரேயடியா அளக்குறீங்களே?“ அப்படின்னேன்.
சிரிச்சுகிட்டே தமிழய்யா அப்பநாய்க்கம்பாளையம் அரங்க முத்துச்சாமி சொன்னதைக் கீழே குடுத்திருக்கேன்.
”இதற்குத் தற்குறிப்பேற்றணி எனப் பெயர். இயற்கையிலேயே நிகழும் நிகழ்ச்சி ஒன்றினுக்குக் கவிஞர் தம் உள்ளக்கிடக்கைக்கு ஏற்பத் தமது கருத்தினை ஏற்றிச் சொல்லல் தற்குறிப்பேற்றணி எனப்படும்.
கேளும். சேக்கிழார் பெருமான் இயற்றியது திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம். இதில் அறுபத்துநான்கு சிவனடியார்கள் வரலாறையும் பாடிப் பரவசமடைகிறார் சேக்கிழார். ஈசனடியார்களிலே சுந்தரரும் ஒருவர். அவரைத் தடுத்தாட்கொள்ள வருகிறார் சிவபெருமான். சுந்தரருக்குத் திருமணம் நடக்கும் அந்த மங்கல நாளை விவரிக்கிறார் சேக்கிழார்.
தடுத்தாட்கொண்ட புராணத்திலே வரும் வைர வரிகள் இவை!
தேன் சுரக்கும் மாலைகளையணிந்த சுந்தரரின் திருமணக் கோலம் காணும் ஆவலினால் அன்று கதிரவன் உதயம் செய்தான் என்கிறாரையா! ஆஹா! அணி! இஃதன்றோ அணி. தற்குறிப்பேற்றணி! பாடலைக் கேளுமையா!.
மா மறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித்
தூ மறை மூதூர்க் கங்குல் மங்கலந் துன்றி ஆர்ப்பத்
தேமரு தொடையல் மார்பன் திரு மணக் கோலம் காணக்
காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான்
மகிழ்ச்சிப் பெருக்கில் மட்டுமா தற்குறிப்பேற்றணி தமிழிலே தவழுகிறது?
சிலப்பதிகாரத்திலேயும் செப்புகிறேன் ஒரு காட்சி! சொல்வீர் பின் அதன் மாட்சி!
கோவலுனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்வோம். மறுவாழ்வு பெறுவோம் என்ற நம்பிக்கையில் மதுரை மாநகர் நோக்கி வருகிறார்களாம். அப்போது அங்குள தோரண வாயிற் கொடிகளெல்லாம் அசைகின்றன.
இளங்கோவடிகளுக்கு அஃது எப்படித் தெரிகின்றது தெரியுமா?
“ஐயகோ! அருமைத் தம்பதியீர்! இங்கே உமக்காகத் தீவினை காத்து நிற்கிறது எனவே நீவிர் ஈண்டு வரவேண்டாம்” என்று சொல்வதைப் போலக் கொடிகள் அசைகின்றனவாம்.
”போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட”
என நீளும் அவ்வரிகள்!
என்ர மூஞ்சியில கெளுத்தி இல்லாததக் கண்டுபுடிச்சுப் போட்டாரு தமிழய்யா!
“என்னயயா! ஏதும் விளங்காததை உமது முகமே விளக்குகிறது!” என ஏளனமாக்ச் சொன்னார்.
"தற்குறிப்பேற்றணியெல்லாம் இந்தத் தற்குறிக்குப் புரியுமாங்கய்யா? வாரனுங்க” அப்படினு சொல்லிப்போட்டு விடை பெற்றேன்.
“அதுவும் சரிதான்! உம்மிடமெல்லாம் இலக்கிய இன்பத்தை எடுத்துரைப்பது பணிச்சுமை அதிகம் இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்கு அணி செய்ததற்கு ஒப்பானது”
“கெதக்”
*********************************************************************
Sep 12, 2009
கற்பனைக் குதிரை
ஏதோ ஒரு படத்துல இப்படி ஒரு பாட்டுப் படிப்பாங்க.
“நேற்றுப் போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை”
எனக்கு நெம்பப் புடிக்கற லைனு அது. ஏன்னாக்க என்ர வேலை அப்பிடித்தான். நேத்துப் பண்ணுன வேலைதான் இண்ணைக்கும் பண்ணுவன்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லீங்க.
கொஞ்சம் வெலாவரி பண்றேன். திடீல்னு ஒரு பொட்டக் காட்டெருமக் குட்டி ஒரு கெணத்தில உளுந்து போட்டுது முந்தா நேத்த்து. அத வெளிய கொண்டாற வேலய அண்ணைக்குப் பாத்தன்.
எனக்குக் கீழ வேல பாக்குற ஒரு ஆப்பீசர் இந்த மாசம் ரிட்யர் ஆகறாரு. அவரோட பணிக் காலத்துல அவரு செஞ்ச வேலைகளையெல்லாம் தணிக்கை பண்ணி லையபிலிட்டீஸ் இருக்கானு ரெக்கார்டு, ஸ்டோர்ஸ், ஸ்டாக், சிவில் வேலைங்கனு தணிக்கை பண்ணி நாலஞ்சு நாள் அதுல கழிஞ்சுது.
கீழ் நிலைப் பணியாளருங்க மேல சுமத்தப் பட்ட குற்றச் சாட்டுக்களோட விசாரணை அதிகாரிங்கற முறையில என்கொயரி கண்டக்ட் பண்ணி அதுல ரண்டு நாளு.
இந்த வருசத்துல செய்ய வேண்டிய கட்டுமானப் பணிகளுக்கான இடத் தேர்வுல ஒரு நாளு.
பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் தொடர்பான மனுக்கள் மீது களத் தணிக்கைல ஒரு நாளு.
பேப்பர் மில்லுங்களுக்கான ரா மெட்டீரியல் சப்ளை பண்ணுற கூப்புங்களை விசிட் பண்றதுல ஒரு நாளு.
நைட் ரோந்து போயிட்டு வந்து காலைல சித்த நேரம் தூங்கிட்டு மறுக்காவும் ரோந்துல ஒரு நாளு போச்சு!
புகார்களை வெசாரணை பண்ணுறதுல ஒரு நாளு.
எலிஃபன்ட் காரிடார் சம்மந்தமான ஆய்வு மூணு நாளு. இப்படி ஒரொரு நாளும் வேற வேற வேலை.
நேத்துக் காட்டுக்குள்ளாற மரக் கன்றுகள் வெச்சிருந்ததைத் தணிக்கை பண்ணுன வேலை.
ஒரு சேஞ்சுக்கு லதாளையும் கூட்டிகிட்டுப் போயிருந்தேன். கோட நாடுங்கிற எடத்துல 102 வருஷத்துக்கும் முந்திக் கட்டுன ரெஸ்ட் அவுஸில தங்கினோம். நெம்ப நெம்பத் தனியா காட்டுக்குள்ளாற இருக்கிற ரெஸ்ட் அவுஸுங்க அது.
அந்த அட்மாஸ்பியர், தனிமை, சூழ்நெலை இதையெல்லாம் வெச்சு சில சிறுகதைகள் எழுதலாம்னு நெனைச்சுகிட்டே தூங்கிட்டேன்.
விடியக் கார்த்தால அசந்த தூக்கத்திலயும் அதே நெனைப்பு.
“அய்யே! என்ன பண்ணீட்ருக்கீங்?”
(அரைத் தூக்கத்தில) கற்பனைக் குதிரயத் தட்டி விட்டுகிட்டிருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாத ஆத்தா!”
“கெரகமே! நீங்க தட்டுறது கற்பனைக் குதுர அல்லோ!”
“கெதக்”
*************************************************************
Sep 8, 2009
ரா
அஞ்சல அடிக்கடி என்னிய சத்தாய்ச்சினே கீறா. “ரிக்ஸா மெரிக்கேன்றதால அளவாக் குட்ச்சினு கெடோன்னு நா சொன்னியது மெய்தான். அதுக்காவா இப்டி கண்ட கஸ்மாலத்தியும் ரா வா அட்சிசினு கெட்க்கிறியே”ன்றா!
இன்னாவோ போங்கப்பா!. முட்ஞ்சா வெரியும் எஸ்ப்ளைன் பண்ணிட்டேன். ரா ன்னா புர்ஞ்ச்சா? சவாரி காத்துனு கீது. வர்ர்டா?
***************************************************************************************************************
Sep 7, 2009
கடல் கன்னி

“ஓ.கே! ரொம்ப விசித்திரமான பிராணி ஒண்ணைப் பத்திச் சொல்லட்டுமா? இதுக்கு ரொம்ப சிறப்புத் தன்மைகள் இருக்கு! மொதலாவது கடல்வாழ் பிராணியான இது புல்லையும் கடல் பாசிகளையும் மட்டுமே சாப்பிட்டு வளரக் கூடிய சுத்த சைவமான பாலூட்டி. ரெண்டாவது இதுங்களுக்கு யானைகளுக்கு இருக்கிற மாதிரி - கொஞ்சம் சின்ன சைஸிலே தந்தம் இருக்கும். மூணாவது கடல்வாழ் உயிரினமான இதுக்குத் தண்ணிக்கடியிலே இருக்கிறதுக்கு சிறப்பா எந்த அமைப்புமே இல்லாமல் இருந்தாலும் கடலிலே வாழும் தன்மை இருக்கு. எண்ணிக்கையில் ரொம்பக் குறைஞ்சிட்டே வருகிற அபூர்வ விலங்கு இது! அதுதான் “கடல் கன்னி!” என்று பலமான பீடிகையுடன் ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.

“என்னது கடல் கன்னியா? சொல்லுங்க! சொல்லுங்க!” என்று ஆர்வமானார்கள் சுட்டிகள்.
“ஆமாம்! கடல் கன்னியேதான்! இதுக்குக் கடல் பசுன்னு இன்னொரு பேரும் இருக்கு”
இதோட விஞ்ஞானப் பேரு டுகாங் டுகான் (Dugong dugon) . இiந்தப் பேரு Duyong அப்படிங்கிற மலாய் பாஷையிலிருந்து வந்தது. இந்த வார்தைக்குக் கடல் கன்னி அப்படின்னு அர்த்தம்.
கடல் பசுக்கள் 2.5லிருந்து 3.3. மீட்டர் வரை நீளமும் 250லிருந்து 600 கிலோ வரை எடை கொண்டதாயும் இருக்கும். தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழக் கூடிய ஒரே பாலூட்டி இது மட்டும்தான். கடல்வாழ் பாலுட்டிகளான திமிங்கலம், டால்ஃபின் இதுங்களைக் காட்டிலும் யானைகளின் குணாதிசயங்கள் இது கிட்டே அதிகமாயிருக்கு. மேல் தாடையிலிருக்கிற வெட்டுப்பற்கள் ஆண் மிருகத்துக்கு 12 வயசாகும்போது சின்ன உறுதியான தந்தங்களா வளர்ச்சி அடையுது. அதனாலேதான் இதுங்களை யானைகளோட சொந்தக்காரங்கன்னு சொல்றாங்க.

இந்திய - பசிபிக் கடல் பகுதிகளின் ஆழக் குறைவான இடங்களில் கடல் பசுக்கள் அதிகமா வாழுதுங்க. மேற்கு ஆஸ்திரேலியா பக்கத்திலிருக்கிற ஷார்க் பே அப்படிங்கிற பகுதிக்கும் குயின்லாந்திலிருக்கிற மோரெடான் பகுதிக்குமிடையே இருக்கிற கடல் பகுதிகளில் அதிகமா இருக்கு. தெளிவான சுத்தமான தண்ணியும் தேவையான உணவு குறைவான ஆழத்திலே அதிகம் இருக்கிறதாலேயும் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரமுள்ள மோர்டோன் பே பகுதியிலே நிறைய வசிக்குதுங்க. கிழக்கு ஆப்பிரிக்காவிலேயும் இருக்கு. இந்தியா இலங்கை நாடுகளுக்கிடையில் பாக் ஜலசந்தியிலும் மன்னார் வளைகுடாவிலும் நிறைய இருந்துச்சு. அந்தமான் - நிகோபார் தீவுகளில் 1950 வரை நிறைய இருந்துச்சு. 1999ல் எடுத்த கணக்கெடுப்பின்படி 100 கடல் பசுக்கள்தான் அங்கிருக்கிறது தெரிய வந்தது.
முந்திக் காலத்திலே இதுங்களை ஏராளமா வேட்டையாடிட்டதாலே ரொம்பக் கம்மியாயிடுச்சுங்க. 1983ல் இந்தப் பகுதியிலும் இலங்கையின் மேற்குப் பகுதியிலும் நடந்த ஆய்வில் ஒண்ணு கூடத் தென்படலை! இந்தியாவின் வடமேற்குக் கரையோரத்தில் 1990ல் நடந்த ஆராய்ச்சியிலே இதுங்க அங்கே ஓரளவு இருக்கிறது தெரிய வந்துச்சு!
ஆண் மிருகங்களை விடப் பெண் மிருகங்கள் கொஞ்சம் பெருசாயிருக்கும். தடிப்பான தோல் சாம்பல் கலந்த பழுப்பு கலரில் இருக்கும். பொதுவாத் தனியாவோ அல்லது ஜோடியாவோதான் இருக்கும். கூட்டமாய்த் திரிகிற கடல் பசுக்களும் உண்டு. மெதுவாத்தான் நீந்தும். முந்திக் கால மாலுமிகள் இதைக் கடல் கன்னி அப்படின்னே நினைச்சாங்க. அதனாலேதான் இதை சைரெனியா (Sirenia) அப்படிங்கிற விலங்கியல் பிரிவுக்குக் கீழே வகைப் படுத்தியிருக்காங்க. (சைரென் அப்படின்னா கடல் கன்னி ன்னு அர்த்தம்)
இதுங்களுக்கு ஏறக்குறைய ஒரு சிலிண்டர் மாதிரி உடம்பு இருக்கும். கழுத்துங்கிறது கிடையாதுன்னே சொல்லலாம். வட்ட வடிவமான தலையும் சின்னக் கண்களும், நீளமான தாடையும் இருக்கும். இதுங்களோட மெல்லிசான வால் நீந்த உதவுது. முன்னங் கால்கள் ரொம்பச் சின்னதா இருக்கும். 14லிருந்து 18 அங்குல நீளம் மட்டும்தான் இருக்கும்னாப் பார்த்துக்கோங்களேன். பேலன்ஸ் பாண்ணவும் திரும்பறதுக்கும் இந்தக் கால்கள் பயன் படுது. சில சமயம் கடல் புல் வெளிகளில் நடக்கவும் இந்தக் குட்டிக் கால்கள் யூஸாவுது.
நீர் மட்டத்துக்கு வந்துதான் சுவாசிக்கும். ரொம்ப நேரத்துக்கு மூச்சை அடக்கிகிட்டு இதுங்களாலே தண்ணிக்கடியிலே இருக்க முடியாது. கண் பார்வை கொஞ்சம் மந்தம்தான். ஆனாக் காது ரொம்ப ஷார்ப்! மேலுதடுக்கு மேலிருக்கிற முடிகள் மூலம் தன்னோட உணவை இது கண்டு பிடிச்சிடும். ஆண் மிருகங்களூக்கும் வயசான பெண் மிருகங்களுக்கும் சின்னத் தந்தம் மாதிரி அமைப்புகளும் உண்டு. சாதாரணமா ஒரு மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நீந்தும். நாளொன்றுக்கு 15லிருந்து 40 கிலோமீட்டர் வரை நீந்தும். பயப் படும்போது வினோதமா ஒரு வித சப்தம் எழுப்பும்.
“ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கே?” என்றாள் சுமதி.
“இன்னும் ரொம்ப சுவாரசியமான விஷயங்கள் இதைப் பத்தி இருக்கு. அடுத்த தடவை பார்க்கிறப்போ சொல்றேன்” என்றவாறு எழுந்தார் ரேஞ்சர் மாமா. சுட்டிக் கூட்டம் கலைந்தது.
Sep 1, 2009
ulcus pepticum

நம்ம ஆசிரமத்தின் பக்தைகளின் ஹெட் கவுன்ட் என்னவென்று கேள்வி பதில் பகுதியில் கோவாலு மாப்ள கேட்ருந்தான். அதுக்கு ulcus pepticum வியாதி பதிவுலகில் பரவுவதை நான் விரும்பவில்லை எனப் பதில் சொல்லியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக வால்பையன் Ulcus pepticum வியாதி பத்திக் கேட்டிருக்கார். சொல்றேன்.
பொதுவா இது அஸிடிடி என்கிற அமிலத் தன்மையால வர்ரது. கொடல்ல ஹட்ரோக்க்ளோரிக் அமிலம் ஜீரணத்துக்காக லேசாச் சுரக்கும். ஆனா வேளா வேளைக்குச் சாப்பிடாம இருக்கிற மாதிரி சந்தர்ப்பங்களிலே சுரக்கிற அமிலம் சில சமயம் இரைப்பை மற்றும் குடல் சுவரையே அரிக்க ஆரம்பிச்சிரும். குடலில் புண் ஆயிரும். குடலில் துவாரம் விழுந்திரும். சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட்ட பின் பயங்கரமா வயிறு வலி இருக்கும். வயிறு ஊதின மாதிரி இருக்கும். எடைக் குறைவு வாந்தி போன்றவையும் ஏற்படலாம். ரத்த வாந்தி கூட ஏற்படலாம்.
சுருக்கமாச் சொன்னா வயிறில் ஓயாமல் எரிச்சல் ஏற்படும்.
இன்னும் சுருக்கமாய்ச் சொன்னால்
வயித்தெரிச்சல்!
************************************************************
Aug 30, 2009
கேள்வி பதில் போட்டாச்சு
விஜய ஷங்கர்
கேள்வி
1) இப்போ உங்க மகன்கள் வாழ்வது வெளிநாடா?
பதில்
பெரியவன் பாலாஜி லண்டனில். இளையவன் கிரிதர் சென்னையில். இருவருமே மெக்கானிக்கல் எஞ்சினியர்கள்
2) உங்கள் இளைய மகன் கிரிதர் பணிபுரியும் அந்த கம்பெனியின் முதல் மூன்று எழுத்து சொல்லுங்க?
ம் ஹு ம்!
(க்ளூ இருக்குது)
கேள்வி
3)ஹெவி டிரைவிங் லைசென்ஸ் எப்படி எடுக்கிறது?
பதில்
லைட் வெஹிக்கிள் மாதிரியேதான்.
சில கூடுதல் ப்ரசீஜர்கள் இருக்கு.
அண்மையிலுள்ள RTO அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
கேள்வி
4)நிறவெறி குறித்த இந்தப் பதிவு என் நெஞ்சை வருடியது! உங்கள் கருத்து?
உங்களுக்கு நெஞ்சை வருடியது
எனக்கு நெஞ்சை நெருடியது
வாய்ப்பாடி குமார்
கேள்வி
1)ஊட்டி – மசினகுடி வழி பாக்க வேண்டிய வழி இல்லைங்களா?
பதில்
நிச்சயமாக! மிகவும் ஆபத்தான பாதையும் கூட. நாங்கள் அந்தப் பாதை நெடுக போர்டுகள் வைத்திருக்கிறோம். அதில் கடைசியாய் அந்தச் சாலை விபத்தில் உயிரிழந்தவர் பற்றின விவரம் எழுதி வைத்திருக்கிறோம்.
என்ன ஒரு விசேஷம்னா 15 நாளைக்கு ஒருக்கா டேட்டாவை அப்டேட் பண்ண வேண்டியிருக்கு. இந்தப் பாதையில் மாதம் குறைந்தது 5 தடவையாவது நான் பயணிக்கிறேன்.
கேள்வி
2)பொன்னூத்தமன் கோயில் மலைகளிலும் காணப்படும் நீருற்றுகள் எப்படி உருவாகிறது?
பதில்
இயற்கையாக.
3)வருடம் பூராவும் வற்றாமல் எப்படி நீர் கிடைக்கிறது?
பதில்
இறைவனின் வரம்.
4)அனுவாவி கோயிலில் இருந்து மருதமலைக்கு காட்டு வழியே செல்ல முடியுமா?
ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
நீங்க ”பைப் அண்டா” னு பேர் வெச்சீங்க சரி! மைசூர்ப் பயணத்தின்போது எல்லாருக்கும் பேர் வைத்த அந்தப் பெண்கள் உங்களுக்கு என்ன பேர் வச்சாங்கன்னு சொல்லவே இல்லயே?
பதில்
”குறி சொல்லிச் சித்தர்” னு வெச்சிருப்பாங்களோ?
செல் நெம்பர் குடுத்திருக்காங்க.
எதுக்கும் கேட்டுச் சொல்றேன்.
நாஞ்சில் நாதம்
கேள்வி
தாயைக் கொன்ற மகனும் மகனைக் கொன்ற தாயும் அப்படின்னு ஒரு பதிவு போட்டீங்களே. அந்த யானையோட குட்டியா இது?
பதில்
ம்
கேள்வி
மீன்களும் இடம் விட்டு இடம் பெயரும் அப்படினு படிச்சேன். உண்மையா சார்?
பதில்
ம்
அமர பாரதி
http://amarabarathi.blogspot.com/
கேள்வி
ஆபத்து சமயங்களில் சமயங்களில் குட்டியை மயக்கமாக்கி இருக்க முடியாதா?
பதில்
குட்டியின் வயசு அதுக்கு இடங் குடுக்கலை. பொறந்து 15 நாள்தான் ஆயிருக்குது. பூங்குட்டி மயக்க மருத்தத் தாங்காது.
அபி அப்பா
http://kummionly.blogspot.com/
கேள்வி
உங்களுக்கும் புலிக்கும் சம்மந்தம் உண்டாமே?
பதில்
ஊருக்குள்ளாற பூந்துருச்சுனாக் காட்டுல உடுற வகையில, போஸ்ட் மார்ட்டம் பண்ணுற வகையில சம்மந்தம் உண்டு.
அட்டவணை I ல் இருக்கிற அரிய உயிரினம் அது.
விஜய் கோபாலசாமி
http://vijaygopalswami.wordpress.com/
கேள்வி
1)நமது ஆசிரம பக்தைகளின் ஹெட் கவுண்ட் ப்ளீஸ்?
பதில்
Ulcus pepticum என்ற வியாதி பதிவுலகில் பரவுவதை நான் விரும்பவில்லை.
கேள்வி
2. “லதானந்த்!”அப்படீன்னு யாராவது எதிர்பாராத நேரத்துல உங்களக் கூப்பிட்டா திரும்பிப் பாப்பீங்களா? ஏன்னா இது நீங்க எழுத்துலகத்துக்காக வச்சிக்கிட்ட புனைப்பேராச்சே?
பதில்
ஆனந்த் அப்படினு கூப்டாத்தான் பாப்பேன். லதான்ந்த் னு ஆருமே கூப்டதில்லையாச்சா? அதான்!
கேள்வி
3. யாருடைய படத்துல நடிப்பீங்கன்னு கேட்டாச்சு, யார வச்சுப் படம் புடிப்பீங்கன்னு கேட்டாச்சு, எந்த இசையமைப்பாளர் பாட்டுப் பாட சான்ஸ் குடுத்தா பாடுவீங்க?
ஆப்ஷன்ஸ்:
ஆ. இளையராஜா;
இ. ரஹ்மான்;
ஈ. வித்யாசாகர்;
ஈ. பரத்வாஜ்;
உ. ஹாரிஸ் ஜெயராஜ்
பதில்
அ. விஸ்வநாதன் – ராமமூர்த்தி : யார்யா அந்தத் தாத்தாங்க?
ஆ. இளையராஜா: முதிய ராஜா
இ. ரஹ்மான்: பாட்டு எங்க கேக்கும்? ம்யூசிக் காது சவ்வு பிஞ்சிரும்
ஈ. வித்யாசாகர் ஈ. பரத்வாஜ் : ஆருப்பா இவிங்க? சோன் பப்டி விக்கிறவிங்களா?
உ. ஹாரிஸ் ஜெயராஜ் ; நமஸ்து நமஸ்து நமஸ்து! Selected!
கேள்வி
4)பக்தி சமாசாரம்லாம் எழுதுறீங்க! எங்கயோ குத்துதே!
பதில்
ஆரு பக்கத்தில நிக்குறாங்க?
கொஞ்சம் குத்தாத தூரத்தில தள்ளி நில்லு மாப்ஸ்!
கேள்வி
5) “நாத்தத்தை எப்படிச் சககிச்சுக்கிறேன்னு கேக்குறீங்களா? சில மனிசருங்கள மனப்பூர்வமா நெனைச்சுக்குவேன்.”
இதுக்கு என்ன அர்த்தம்? நல்லவங்களையா? கெட்டவங்களையா? யாரை நெனைச்சுக்குவீங்க?
பதில்
சில அயோக்கியப் பேர்வழிகளின் செயல்பாட்டை நெனைச்சுக்குவேன். பொண நாத்தம் மறைஞ்சிடும்.
நாதாஸ்
http://photography-in-tamil.blogspot.com/
கேள்வி
காடுகளில் பயணம் புரியும் போது யானை, புலி, சிறுத்தை, காட்டு பன்றி போன்ற விலங்குகள் உங்களையோ, உங்களை சேர்ந்தவர்களையோ தாக்க வந்துச்சா ? அப்ப என்ன செஞ்சீங்க ?
பதில்
சமீபத்துல கூட ஒரு பதிவு எழுதியிருக்கேன். இன்னொரு விஷயம் இப்பச் சொல்றேன்.
கல்யாணமான புதுசுல நடந்த ஒரு சம்பவம். கூடலூர்ல அப்ப வேலை. என்ர சபார்டினேட் ஒருத்தருக்குக் கல்யாணம். ஒரு டீ எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்புல நடந்தது. நானும் என்னோட ஃபாரஸ்டர் மாணிக்கம் அப்படிங்கிறவரும் கல்யாணத்துக்குப் போனோம். என்ர புது டீலக்ஸ் புல்லட் மோட்டார்சைக்கிள்ல ராத்திரி 8 மணிக்குக் காட்டு வழியில போறோம். கல்யாணத்த அட்டண்ட் பண்ணிட்டு திலும்பரப்போ எதுக்காப்புல ஆனை வழி மறைக்குது. வண்டியப் போட்டுட்டு அசுர வேகத்துல டீ எடேட்டுக்குள்ளாற் ஓடி லேபர் லைனல வந்து பொத்துனு உழுந்தேன். பொறகாண்ட வந்த ஃபாரஸ்டர் குறுக்குத் தடத்துல என்னைய அம்போனு உட்டுப்போட்டு பஸ் புடிச்சு கூடலூர் போயிட்டாரு! நானு அவ்வளவு வேகமாப் பொதர்ல தாண்டிக் குதிச்சு ஓடி வந்ததுக்கு மன தைரியமும் விருந்துல குடுத்த ஸ்பெஷல் ஹோம் மேட் தீர்த்தமும்தான் காரணம்.
ஊட்டுக்கு வந்து லதா கிட்டச் சொன்னேன். பூசை ரூம்புல இண்ணைக்கு வரைக்கும் ஆனை பொம்மை ஒண்ணைவெச்சுக் கும்புடுறா!
இந்தியன்
http://www.blogger.com/profile/15128991528579186342
கேள்வி
1)ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ ஶௌ"
மேற்கண்ட எழுத்துகள் எங்கு பயன்படுத்தப்படுகிறது?
பதில்
அ ஆ இ ஈ மாதிரி தெரியுது? வேற ஒண்ணும் தெரியல. தெரிஞ்சவிங்க சொல்லுங்க.
கேள்வி
2)பாம்புடுங்கி என்ற சொல்லை நம்மூரில் பெரிசுக சொல்லுவாங்க. அதன் பொருள் மற்றும் தோற்ற வரலாறு?
பதில்
புடுங்கி என்ற சொல்லுக்கான adjective அது. ’பெரிய இவன்’ என்ற பொருள் வரும். ஒரு நெகடிவ் குறியீடு. பதிவுலகில நெம்பப் பேரு இருக்காங்களே!
அவர்: நேத்து எங்கமா மீன் வறுத்துக் கொண்டுவந்திருந்தாங்க. ஒங்களுக்குத்தான் கடல் மீன் பிடிக்குமே! உங்களை நினைச்சுகிட்டே மீன் பூராவும் சாப்பிட்டேன். உங்களை முதல் மரியாதை சிவாஜி மாதிரி கற்பனை பண்ணிகிட்டேன். அதுக்காக என்னை ராதானு நினைசிராதீங்க.ஹி!ஹி!
நான்: (எரிச்சலுடன்): அப்ப ராதா ஆரு உங்கம்மாளா?
அவர்: (உடனடியாக); என்னுடைய அம்மாவுக்கு வயசு 67. உங்களுக்கு ஓக்கேவா?
நான் : “கெதக்”
ஜவஹர்லால்
http://sirippuvalai.blogspot.com/
கேள்வி
1)கடவுள் இருக்கிறாரா இல்லையா?
பதில்
இருக்கிறார் என நான் நம்புகிறேன்.
2)புராணங்களும் இதிகாசங்களும் சமூகத்துக்குத் தீமையான பதில்
எதையாவது சொல்லியிருக்கிறதா?
சரியாகத் தெரியவில்லை.
3)நாத்திகம் அறிவுஜீவிகளின் அடையாளமா?
பதில்
இல்லை.
ஸ்வாமி ஓம்கார்
கேள்வி
உங்களுக்காக ஒரு முழு நாள் கடவுள் கொடுக்கிறார்.என்ன வேணுமானால் செஞ்சுக்கலாம். கேட்டது கிடைக்கும்.24 மணி நேரத்தை எப்படி கொண்டாடுவீங்க?
பதில்
108 வைணவத் திருத் தலங்களில் பூவுலகில் பார்க்கக் கூடிய 106ல் இன்னும் பார்க்காத திவ்ய தேசங்களுக்கு முதலில் ஒரு ஸ்பீட் டூர்.
அந்த(?) 78 பேருடன் ஓர் உல்லாசப் பயணம்.
தாய்லாந்துக்கு அவசர ட்ரிப். அம்பு விடுவது உள்பட ஏனைய சமாசாரங்கள் கண்டு களித்து, உண்டு மகிழ்ந்து, நெகிழ்ந்து கொஞ்ச நேரம் பொழுது போக்கணும்.
இனிய நண்பர்களுடன் கொஞ்ச நேரம் இலக்கிய உரையாடல்.
அப்புறம் சில பேர்வழிகளை நையப் புடைக்கணும். சரியா?
அட அதுக்குள்ள 23 மணி நேரம் ஆயிருச்சா? மிச்சம் ஒரு மணி நேரம் நிம்மதியா விடுங்கப்பா ஆள. ஸ்நேகா கூடவும் ரேகா கூடவும் தத்துவ விசாரம் பண்ணணும்.
தண்டோரா
http://vilambarakkaaran.blogspot.com/
கேள்வி
நீங்க சொன்ன சந்திப்பு எப்போ?ஆவலுடன் வெயிட்டிங்!
பதில்
கூடிய விரைவில் ஏற்பாடு செய்கிறேன். நந்துவை கோ ஆர்டினேட்டராக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப் போகிறேன். அறிவிப்பு விரைவில்.
நாதாஸ் மற்றும் பலர்
கேள்வி
பிறந்த நாளை எப்படிக் கொண்டாடினீர்கள்?
பதில்
விரைவில் தனிப்பதிவு
ஏஸ்
http://thollayothollai.blogspot.com/
கேள்வி
கீழே விழுந்து இறந்ததுன்னு சொல்றீங்க.. ஆனா அதுக்கு வயித்த ஏன் திறக்கறீங்க? Process?
பதில்
ப்ரொசீஜர்னு ஒண்ணு இருக்கல்ல. லாரி ஏறி செத்துப்போனவனையும் போஸ்ட்மார்ட்டம் பண்ணுறாங்கள்ல அது மாதிரிதான்.
(“வயித்த ஏன் திறக்கறீங்க?” என்ற உங்களின் சொல்லாடல் நன்கு உள்ளது.)
(பெயர் வெளியிட வ்ரும்பாத ஒருவர் ஈமெயிலில் கேட்ட கேள்வி மூன்றில் ஒன்று மட்டும்தான் பொது இடத்தில் பதில் சொல்லக் கூடியது. அது இது!)
கேள்வி
நீங்கள் முதன்முதலாகப் படித்த கவிதை எது?
பதில்
மொதோ மொதலாப் படிச்சது நாபகமில்ல. கேட்டது வேணா நெம்ப நல்லா நாபகம் இருக்கு. அப்ப நான் நெம்பச் சின்னூண்டு வாண்டு. எங்க ப்ரஸ்ஸல வேல செஞ்ச பையன் ஒருத்தன் பாடுனது :
”நாடோடி மன்னன்
நீடூழி வாழ்க
எம்ஜியார் சண்டை
பானுமதி கொண்டை!”
அமர பாரதி
http://amarabarathi.blogspot.com/
கேள்வி
சமீபத்துல முதலைகள் மேல ரேடியோ ட்ரான்ஸ்மிட்டரோட ஒரு சிப் வைக்கறாங்கன்னு டிஸ்கவரி சேனல்ல பாத்தேன். அந்த முறையோட முன்னோடியா இந்த ரிங்கிங்?
பதில்
ஜோசப் பால்ராஜ்
http://www.maraneri.com/
கேள்வி
ஒங்க பதிவுகளிலே சில கவிதைகள் இருக்கே! ஏனுங் இத எழுதுனது நீங்களா இல்ல அப்பநாய்க்கம்பாளையம் அரங்க முத்துச்சாமி அய்யாங்களா?
பதில்
ஜீவசுந்தரம்
சுமஜ்லா
http://sumazla.blogspot.com/
கேள்வி
ட்ரெக்கிங்கா? அப்படீனா?
பதில்
ட்ரக்கிங் பத்தி என்ர தனிப்பதிவே இருக்கு தேடிப்பாருங்க.
(நோன்பெல்லாம் எப்படியிருக்கு? ரம்ஜானுக்கு பிரியாணி உண்டா?)
வால்பையன்
http://valpaiyan.blogspot.com/
கேள்வி
“சொடிபிகினாங்கோ! ஸொம்மா சொடிபிகினாங்கோ!
பதில்
“ஆணவம் கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் அறுத்தாலன்றி வீடு பேறினைய அடைய முடியாது. பசு, பதி, பாசம் என்பன யுக யுகமாய் மானுடரைத் தொடர்ந்து வருவன. ”ஆசையறுமின்கள் ஆசையறுமின்கள் ஈசனோடாயினும் ஆசையறுமின்கள்” என்பதே மேற்படி மண்ணடி மாரியின் பாடலுக்கு விளக்கம்.
லவ்டேல்மேடி
கேள்வி
1)மாசி கரிய பண்ட்ட சாமி கோவில் விசேஷத்தில் நீங்க மைக்கோட இருக்குற போட்டோ ஓக்கே! ஆனா என்ன பேசுனீங்கன்னு சொல்லவே இல்ல?
பதில்
பொதுவாக் கொஞ்ச நேரம் பேசிட்டுப் பிளாஸ்டிக் பொருளையெல்லாம் அப்புறப் படுத்தச் சொன்னேன்.
2)கோவில் கோத்தகிரி பக்கமா? இல்ல மஞ்சூருக்கு கீழையா? இல்ல கூடலூருக்கு பக்கமா?
பதில்
மசினகுடியிலிருந்து ஆனைகட்டி என்னும் ஊர் வழியாகச் chenrruலை சரிவில் தெங்குமராட்டா நொக்கிப் போகும் வழியில் இருக்கிறது கோவில்.
www.parisalkaaran.com
கேள்வி
அனைத்து இன்பங்களையும் துய்த்துவிட்டேனா - என்ற கேள்வி இப்போதும் உண்டா? அளவில்லா அன்போடு-கிருஷ்ணா
(அப்படிப் போடு!)
பதில்
இப்பவும் உண்டு – லேசா!
கேள்வி
லதாக்காகிட்ட பொய் சொல்றதுண்டா?
பதில்
சின்ன விஷயத்துக்கு நெம்பத் தடவை.
பெரிய விஷயத்துக்கு 78 தடவை
Aug 28, 2009
முள்ளம்பன்றி

‘'என்னடா மாதப்பா! எங்கேடா ஹேர் கட் செஞ்சே? தலையப் பார்த்தா முள்ளம் பன்றி மாதிரி இருக்கு!” என்று மாதப்பனை ஏகமாய்க் கிண்டலடித்தாள் தங்கமணி”. மாதப்பன் முறைத்தான்.
“ஏம்மா! முள்ளம் பன்றின்னா அவ்வளவு இளப்பமா? அதுகிட்டேயும் தெரிஞ்சுக்க வேண்டிய ஆச்சரியமான விஷயங்கள் எத்தனையோ இருக்கு!” என்றபடி சுட்டிக் கூட்டத்தில் பேச ஆரம்பித்தார் ரேஞ்சர் மாமா.
“தரையைத் தோண்டிக் கிழங்குகளைச் சாப்பிடக்கூடிய முள்ளம்பன்றிக்குக் கோரைப் பல்லே கிடையாதுங்கிறது ரொம்ப ஆச்சரியமான விஷயம். வெட்டுப் பற்கள்தான் அதுக்கு இருக்கு. ரெண்டாவது சுவாரசியமான விஷயம் இதோட தோலில் இருக்கிற ரோமங்கள்தான் முட்களாய் மாறுபாடு அடைஞ்சிருக்கு.

“முள்ளம்பன்றியோட சைஸ் என்ன மாமா? நான் இது வரைக்கும் அதைப் பார்ததேயில்லை” என்றாள் சுட்டி லிஸ்டில் புதிதாய்ச் சேர்ந்திருந்த ஜெயலட்சுமி.
“ சொல்றேன்! முள்ளம்பன்றி ஒரு தாவர பட்சிணி. 70-90 செ.மீ நீளம், 11-18 கிலோ எடை கொண்டதாயிருக்கும். இதோட கால்களில் இருக்கிற நீளமான நகங்கள் வளைகள் தோண்டறதுக்கு யூஸாவும். இது ராத்திரியில் அதிகமா நடமாடுகிற பிராணி. இதோட முட்களோட நீளம்18-30 செ.மீ. வரை இருக்கும். கழுத்து, தோள்பட்டை இங்கெல்லாம் 15-30 செ.மீ நீளத்துக்குக் கொத்தாக ரொம்பக் கூர்மையான ஊசி முனை மாதிரி இருக்கும். முதுகுப் பக்கத்திலேயும் ஏராளமான முள் இருக்கும். கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்திலே இந்த முட்கள் இருக்கும். வால் பக்கத்தில் கொஞ்சூண்டு சின்னதா வெள்ளை நிறத்திலே முட்கள் இருக்கும். மேலே இருக்கிற நீளமான முட்களுக்குக் கீழே சின்ன சைஸிலே முட்களுடன் இன்னொரு அடிப் பகுதியும் இருக்கும்.'
“இந்த முட்களாலே முள்ளம்பன்றிக்கு என்ன யூஸ் மாமா?” என்றாள் குமுதா.

“எதிரிகளைப் பார்க்கிறப்போ இந்த முட்களைச் சிலுப்பி எதிரிக்கு செமையாய்ப் பயங்காட்டும். வால் பக்கத்திலிருக்கிற முட்களை வேகமாய் ஆட்டும். அப்ப ஒண்ணோடொண்ணு முட்கள் உரசி கிலுகிலுப்பை ஆட்டின மாதிரி சவுண்ட் கொடுக்கும். இந்தச் சத்தத்தைக் கேட்டதுமே நிறைய எதிரிங்க ஜகா வாங்கி ஓடியே போயிடும்!”
“இதோட விலங்கியல் பேரு என்ன மாமா?” என்றாள் பத்மா.
“ஹிஸ்ட்ரிக்ஸ் இண்டிகா (Hystrix indica) அப்படிங்கிறதுதான் இதோட விலங்கியல் பேரு. இங்கிலீஷிலே போர்குபைன் அப்படிம்பாங்க.”
“எங்கெல்லாம் முள்ளம்பன்றி இருக்கு மாமா?” என்றாள் மெஹருன்னிஸா.
“இந்தியா, நேபாளம், பூடான், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான், இஸ்ரேல், ஈரான், சவுதி அரேபியா இங்கெல்லாம் ஜாஸ்தியா இருக்கு. மலைப் பாங்கான பகுதிகள்னா இதுக்கு ரொம்ப இஷ்டம். இருந்தாலும் ஈரமான பகுதி, வறண்ட பகுதி, திறந்த வெளிகள், புல்வெளிகள் இந்த மாதிரி எந்தப் பகுதியா இருந்தாலும், அடர்ந்த காடாக இருந்தாலும் வாழப் பழகிக்கும். பகல் நேரங்களிலே பொந்துகளிலும், பாறைகளுக்கிடையிலும், வளைகளிலும் மறைவாக இருந்துக்கும். ராத்திரியானதும் இது நடமாட ஆரம்பிச்சிரும். பொதுவா மரங்களிலே ஏறாது. ஆனா சூப்பரா நீச்சல் அடிக்கும். நீளமான சுரங்கம் போன்ற அமைப்பில் தன்னோட வளையைத் தோண்டிக்கும். கூர்மையான மோப்ப சக்தி இதுக்கு இருக்கு. கண்ணிகளில் இருந்து சாமார்த்தியமாகத் தப்பிக்கிற ட்ரிக் இதுக்கு அத்துபடி!
“முள்ளம்பன்றியோட ஆகாரம் என்ன மாமா?” இது கிரிதரின் கேள்வி.
“காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கிழங்குகள், வேர்கள் போன்ற அத்தனையும் ரொம்ப இஷ்டமாய் உள்ளே தள்ளும். காட்டிலே இயற்கையாக் கிடைக்கிற சமாச்சாரங்களோடு விளை நிலத்திலே உற்பத்தியாகிற பயிர்களையும் தின்னுடும். கீழே விழுந்து கிடக்கும் எலும்புகளையும் மான் கொம்புகளையும் மென்னு துப்புகிற வழக்கமும் இதுக்கு உண்டு. முட்கள் வளரத் தேவையான கால்ஷியம் கிடைக்கிறதுக்குத்தான் இப்படிச் செய்யுதுங்க.”
“முள்ளம்பன்றியோட குட்டிப் பாப்பாகள் எப்படி இருக்கும் மாமா?” இது சூர்யாவின் கேள்வி.

“குட்டிப் பாப்பாக்கள் பிறக்கும்போதே கண்கள் திறந்திருக்கும். சாஃப்டான முள்ளோட அழகா இருக்கும். சாதாரணமாக 2 முதல் 4 குட்டிகள் வரை போடும். பொதுவா ஒரு ஆணும் ஒரு பெண்ணுமாகவே வளையிலே இதுங்க வாழும். சுமாரா 20 வருஷம் வரை இது உயிர் வாழும்.”
“இதுக்கு எதிரிங்க யரு மாமா?”

“இதனுடைய முக்கிய எதிரிகள், புலி, சிங்கம் மாதிரியான மிருகங்கள்தான். ஆனா அவ்வளவு லேசிலே இது மாட்டிக்காது. ஆபத்துக் காலத்தில் தன்னோட முட்களைச் சிலுப்பிக்கிட்டு வால் பக்கத்திலிருக்கிற முட்களை ஆட்டி ஒரு விதமான சப்தத்தை எழுப்பும். வேறு ஏதவது மிருகம் தாக்க வந்துச்சினாத் தன்னோட பின் பகுதியால, தாக்க வந்த மிருகம் மேலே வேகமாக மோதும். அப்போ இந்த முட்கள் எதிரியோட உடம்பிலே ஆழமாத் தைச்சு பயங்கரமா வலியை ஏற்படுத்தும். சில சமயத்தில் எதிரி மிருகம் செத்துக் கூடப் போயிடும். நிறைய சமயங்களிலே இந்த முட்கள் முள்ளம் பன்றியிடம் இருந்து கழண்டு எதிரி உடம்பிலேயே நிரந்தரமாத் தங்கியும் விடும்.”

“எதிரிங்க நிறைய இருந்தாலும் இந்த இனம் அழியக் கூடிய அபாயம் இல்லை. ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்?” என்று கொக்கி போட்டார் ரேஞ்சர் மாமா.
“பல விதச் சூழலிலும் இதுங்க தாக்குப் பிடிச்சு வாழறதாலேயும் இதுங்களோட உணவுக்குப் பற்றாக்குறை இல்லாததாலும் இந்த விலங்கு அழியக் கூடிய அபாயம் இல்லை. சரிதானே?” என்றாள் சத்யா.
“சரி மாமா கடைசியா ஒரு கேள்வி! முள்ளம்பன்றியாலே மனுஷங்களுக்கு நன்மையா தீமையா?” என்றாள் சுமதி.
“விதைகள் பரவுறதுக்கும் மகரந்தச் சேர்க்கைக்கும் முள்ளம்பன்றி ஹெல்ப் பண்ணுது. இதோட மாமிசம் உணவாகப் பயன்பட்டிருக்கு. அதே சமயம் இதாலே நிறையக் கெடுதல்களும் இருக்கு. வளைகள் தோண்டுறதாலேயும் தானியங்களையும், மத்த உணவுப் பொருள்களையும் தின்று தீர்ப்பதாலேயும் விவசாய விளை பொருட்களையும் பூந்தோட்டங்களையும் பெரிதும் நாசப் படுத்துது. இதனுடைய முட்கள் சிலருக்கு ஒவ்வாமையை (Allergy) ஏற்படுத்தும்னு கண்டுபிடிச்சிருக்காங்க. இதோட முட்கள் வீட்டில் வைச்சிருக்கக் கூடாத ஒரு கெட்ட வஸ்து அப்படிங்கிற கருத்தும் பரவலாக இருக்கு. எழுந்தார் ரேஞ்சர் மாமா. கலைந்தது சுட்டிக் கூட்டம்.
*******************************************************************************
Aug 24, 2009
முக்கா சைஸ் ஆனை
டீ எஸ்டேட் வழியா ஒரு ஆனைக் கூட்டம் போயிகிட்டிருந்துச்சு. அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு முக்கா சைஸ் ஆம்பள ஆனை தனியாப் பிரிஞ்சிருச்சு. அஞ்சு வயசிருக்கும் அதுக்கு. தந்தமெல்லாம் மொளைச்சு விடலைப் பையன் மாதிரி இருக்குற அந்த ஆனை டீ எஸ்டேட் வழியா மொதல்ல நான் சொன்னனே அந்த பங்களா இருக்குற தோட்டத்துக்குள்ளாற பூந்திருச்சு.
அந்தத் தோட்டத்துக்குள்ளாற நெம்ப மூங்கிலு, பேரிக்கா மரெமெல்லாம் இருக்குதாச்சா? ஆனைக்கு நெம்ப நிதாயிருச்சு. வகுறு பொடைக்கத் திங்க வேண்டியது, ஆராச்சும் கிட்டத்தால வந்தா முடுக்க வேண்டியது, கொறட்ட போட்டுத் தூங்க வேண்டியது.
ஸ்பாட்டுக்குப் போலாம்னு பொறப்டோம். காம்பவுண்டு கேட்டுக்கிட்டிருந்த செக்யூரிட்டி, ஒண்ணுஞ் சொல்லாம கேட்ட்டத் தொறந்து உட்டாரு. நாங்க ஜீப்புல கொஞ்சம் தூரம் போன உடனே வழியில ஒரு ஜீப்பு நிக்குது. அது சிங்கிள் ரோடு வேறையா? வழியில நிக்கிற ஜீப்ப நகுத்தாம நாங்க போக முடியாது. அந்த ஜீப்புல டாப்பு கீப்பு ஒண்ணுங் கெடையாது. சஃபாரி ஜீப் கெட்டப்புல இருக்குது.
ஆச்சரியம்! சாவி ஜீப்புலயே இருக்குதா? செரின்டு “டாப்பில்லாத ஜீப்புல ஏறி நானு முன்னால போறன். பொறகாண்டையே வாய்யா!”னு என்ர ஜீப் ட்ரைவர்கிட்ட சொல்லிப்போட்டு அதை ஸ்டார்ட் பண்ணி நகுத்தினேன். அப்பத்தான் அது லெஃப்ட் ஹேண்ட் ஜீப்புங்குறது ஒறைச்சுது, ’செரி கொஞ்ச தூரம்தான….. ஓட்டிப்போடலாம்! நாம ஓட்டாத வண்டியா?’னு ஸ்டார்ட் பண்ணுனா, “அய்யா! சாக்கிரிதி!” னு பொறகாண்ட என்ர ஆளுங்க ஒரேயடியாச் சத்தம் போடுறாங்க.
திலும்பிப் பாக்குறேன். அதே கண்டிஷன்ல ஜீப்ப நோக்கி ஓடியாருது. டமால்னு ஃபர்ஸ்ட் கியர மாத்தி சல்லுனு ஓட்றேன். இப்ப எங்க ரண்டு பேருக்கும் பாதுகாப்பான இடவெளி இருக்குது. அப்பப் பாத்து ஒரு சின்ன ஹேர்ப் பின் பெண்டு. கியர மாத்துனா செகண்டுக்குப் பதிலா ந்யூட்டரலாயிருச்சு. பொறகாண்ட தொரத்துர ஆனைக்கும் எனக்கும் மறுக்காவும் இடைவெளி கம்மி. சாமியெல்லாம் கும்புட்டுகிட்டு மறுக்காவும் ஃபர்ஸ்ட் கியர் போட்டு பங்களா வாசலுக்கு வந்திட்டேன்.
தூரத்துல ஆனை ஓடியாருது. எறங்கி ஓடிப் போயிக் கதவை இடிக்குறேன். அந்தம்மா ஆனதான் கதவ இடிக்குதுனு நெனைச்சுகிட்டுத் தொறக்க மாட்டீங்குது. அப்பறந்தான் காலிங் பெல்ல அடிக்கற ஐடியா வந்துச்சு.
கதவத் தொறந்தாங்க. உள்ளாற பூந்து கதவத் தாள் போட்டுட்டேன். வெளியில என்னைக் காணாம ஆனை ஒரு பூந்தொட்டியத் தும்பிச்சங்கையில் தூக்கித் தரையில போட்டு ஒடச்சு ஆங்காரமப் பிளிறிகிட்டுக் கொஞ்ச நேரம் நிக்குது. அப்பறம் பக்கத்துல இருக்குற பேரிக்கா மரத்துல இருந்து காய்களப் புடுங்கித் திங்க ஆரமிச்ச்சது.
இதுக்குள்ளாற என்ர ஆளுங்களும் வந்து சேந்தாங்க. பட்டாசெல்லாம் கொளுத்தி அந்த ஆனைய அது வந்த வழியிலயே முடுக்கப் பாத்தோம். இதுல என்ன கோளாறுனா, பக்கத்துலயே மெயின் பஸ் ஸ்டேண்டு. பள்ளிக்கூடமெல்லாம் இருக்குது. அங்க பூந்து ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப் போச்சுனா என்னாகுறது?
ஆனையையும் காப்பத்தோணும். சனங்களுக்கும் கெடுதல் வந்தறக் கூடாது.. அதுக்குள்ளாற எங்க டிபார்ட்மெண்ட் வெட்னரி டாக்டரும் வந்து சேந்தாரு. மேலதிகாரிகள்கிட்ட ஆலோசனை கேட்டோம்.
பலவிதமான pros and consஐயும் அலசி ஆராய்ஞ்சு தெளிவா இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்தாங்க. அதாகப் பட்டது, ”அந்த ஆனைய ட்ரான்க்வலைஸ் பண்ணிக் காட்டுக்குள்ளயே பத்திரமா உடுங்க. பப்ளிக்குக்கு எந்த அசம்பாவிதமும் நேர்ந்தரக் கூடாது”னு உத்தரவு வந்துச்சு.
டாக்டருகூட ஆனையப் பத்தி நெம்ப நல்லாத் தெரிஞ்ச எளந்தாரி இருளர் வாலிபப் பசங்க பத்துப் பேருங்கூடி வந்திருந்தாங்க.
ஆனைக்கு மயக்க மருந்து குடுக்குற ஆரம்ப கட்ட வேலைகளை ஆரமிச்சோம். ஆனை நெம்ப சரிவுல இருக்குறப்போவும் மயக்க ஊசி போட முடியாது. ஆனை நெம்ப மயங்கிக் கீழ படுத்துறுச்சுனு வெய்ங்க. அப்பறம் அதைத் தூக்கி லாரிக்குள்ளாற வெக்கவும் முடியாது.
செரி இதுக்குள்ள ஆனை நிக்கிற எடதிலிருந்து லாரியில அதை ஏத்துறதுக்கு வாகா பொக்லைன் வந்து அதை ஒரு டீம் கெவுனிக்குது. லாரியில கூண்டு செய்யுற வேலைய உண்ணொரு டீம் கெவுனிக்குது. மயக்கமான ஆனை நின்ன வாக்கிலயே தூங்க ஆரமிச்சுது. செம கொறட்டை. ஒரு இருவதடி நீள்க் குச்சில லேசா அதை அசக்கிப் பாத்தம். ம்ஹூம்! எந்தச் சலனமும் இல்ல.
போலாம்னு இருக்கேன்.
******************************************************************************************************
Aug 18, 2009
மைசூர்
பொடுசு ஆனைக் குட்டி மீட்பு, அதுன்ர அம்மா ஆனைப் போஸ்ட் மார்ட்டம், உண்ணொரு முக்கா சைஸ் ஆனயப் புடிச்சு முதுமலைக்குக் கொண்டுபோறது, வெளிநாட்டுப் பொம்பளைய ஆன மிதிச்ச கேஸ டீல் பண்றதுனு வேல மேல வேல. அதனால மைசூர் ட்ரிப் பத்தி வெலாவரி பண்ண முடியல இப்பம் லேசா மூச்சு உட டயம் கெடச்சது. பாப்பம். முச்சூடும் எழுத முடியுதான்ட்டு.
மொதல்ல பெங்களூரும் போலாம்னு இருந்தோம். அபப்றமேல்ட்டு ஒரு நாளைக்கு மேல லீவு எடுக்குறதுக்கு எனக்கே மனசு கேக்கல.
செரி மைசூர் ட்ரிப் பத்திப் பாப்பம்.
பஸ்லயே போலம்னு முடிவு பண்ணுனோம்.
எங்க சீட்ல உண்ணொருத்தர் ஒக்காந்திருந்தாரு. அவரு டிக்கட்லயும் அதே நம்பரு. அப்பறம் கண்டக்டரு பஞ்சாயத்துப் பண்ணி எங்களப் பொறகாண்ட டயருக்கு மேல இருக்குற சீட்ல ஒக்கார வெச்சாரு. குறுகிகிட்டு ஒக்காந்த்துகிட்டே மைசூர் போய்ச் சேந்தோம்.
பஸ்ல பாதி தூரம் வந்திருப்போம். பஸ்ஸோட கூரையிலிருந்து ஒரு ஸ்பீக்கர் கள்ண்டு போயி என்ர தோளில உளுந்திட்டுது. செம வலி. லதா அந்த ஸ்பீக்கர அப்படியே ஒடுற பஸ்ல இருந்து வெளிய தூக்கிப் போட்டுட்டா கோவத்துல.
பொட்டிய இக்கத்துல வெச்சுகிட்டே ஏற்பாடு செஞ்சிருந்த லாட்ஜ் போனோம். 500 ருவா நோட்டுக்கு ஆட்டோக்காரர்கிட்டயும் சில்லுவானம் இல்ல. அவரு வாங்கிகிட்டு வாரதுக்குள்ளாற லாட்ஜு வாசல்லயே வரவேக்க என்ர பேட்ச்மேட்டுங்க வந்துட்டாங்க. லதா கைப்புடி இல்லாத சூட்கேஸுக்கும் தனக்கும் சம்மந்தமில்லாத மாதிரி தள்ளி நின்னுகிட்டா.
எனக்கு எல்லாரும் என்ர சூட்கேஸ வேடிக்க பாக்குற மாதிரி ஒரு ஃபீலிங்.
ரூம்பெல்லாம் நெம்ப நிதா இருந்துச்சு. ஏசி ரூம்பு. சூப்பர் டெக்கரேஷன். அதெல்லாஞ் சரித்தான். அத்தச்சோட்டு ஓட்டல்ல கரண்டு போயிருச்சு. ஜெனரேட்டருங்கூடி வேல செய்யல. அர மணி நேரத்துக்கப்பறம் கரண்டு வந்துச்சு. அதுக்குள்ளாற 10 ட்ரெயினிங்மேட்ஸ் மனைவிமார் சகிதம் வந்திருந்தாங்க. எல்லாருக்கும் பக்கத்துப் பக்கத்து ரூம்பு. பழைய நினைவுகள்ல மூழ்கினோம். அப்புறம் ஒரு ஓசனை பண்ணுனேன்.
பெண்டுகள் ரூம்புல ஒரே சிரிப்பும் பாட்டுமா இருக்குது. நாங்க இருந்த ரூம்புல முக்கியமா சில சத்தங்கள் கேக்குது.
‘டப்’
‘சல சல’
‘கிணிங் கிணிங்’
’கறுக் மொறுக்’
ஒரு மணி நேரத்துக்கப்பறம் மண்டபத்துக்குப் போனோம்.
சாமுண்டீஸ்வரி கோவில் போனோம்.
ஒரு ஸ்வராஜ் மஸ்டாவிலபயணம். பக்கத்து ரெட்டை சீட்ல காலேஜுப் புள்ளைங்க ரண்டு செம அளும்பு பண்ணிகிட்டு வருதுங்க.
பஸ்ல இருக்கிறவிங்களுக்கெல்லாம் பட்டப் பேரு வெச்சு சிரிச்சுகிட்டே வருதுங்க.
உதாரணமா “மைசூர்லேருந்து பஸ்ஸுல வர்ரப்போ அழுதுகிட்டே விடை பெற்ற பொம்பளைக்கு இதுங்க ‘பிரியாவிடை’னு பேரு வெச்சுச் சிரிக்குதுங்க.
நானும் இதெல்லாம் பாத்துப் புன்முறுவல் பூத்ததுனால உண்ணம் என்கரேஜ் ஆகி தமாஸ் பண்ணிகிட்டே வருதுங்க.
ஒரு மிடில் ஏஜ்ட் லேடி இங்கயும் அங்கயும் வேனுக்குள்ளாற சுத்திச் சுத்தி வருது. அதுக்கு அந்தப் புள்ளைங்க வெச்ச பேரு ’சங்கு சக்கரம்.’
இப்படியே ஒரு பொபளைக்கு ’வாந்தி’ அவ கணவனுக்கு ‘வாந்தி புருசன்’ இப்படியே பேரு வெச்சுச் சிரிக்குதுங்க.
இடையில ஒரு ஊர்ல நெம்ப குண்டா பெரிய தொப்பையோட ஒரு பொம்பளை பஸ்ல ஏறுச்சு. அவிங்க பின்னாலயே அந்தக் குண்டம்மாவோட ஊட்டுக்காரரு வேனுல ஏறுராரு. அவரும் நெம்ப குண்டு. மெகா சைஸ் தொந்தி.
அந்தக் குண்டம்மாவைக் காமிச்சு “அண்டா வருதுடீ”னு மொள்ளமா ஒரு புள்ளை சொல்லிச் சிரிக்குது.
அந்தப் புள்லைகள்ல ஒருத்தி, “அங்கிள்! அந்தக் குண்டான ஆளுக்கு நீங்க ஒரு பேரு செலக்ட் பண்ணுங்க!”
நானு, “பைப் அண்டா” அப்படின்னேன்.
“கெரகமே”
************************************************************* **********************
Aug 16, 2009
வெற்றியா தோல்வியா?
அந்த யானைக் கூட்டத்திலே பிறந்து பதினைந்து நாட்களே ஆன சின்னஞ்சிறு ஆண் குட்டி ஒன்றும் இருக்கிறது. சரியான குறும்பு. அங்குமிங்கும் ஓடுவதும் விளையாடுவதுமாய் இருந்தது வரப் போகிற அபாயத்தை உணராமல்!
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் பதினோராவது கொண்டையூசி வளவு அருகில் ஒரு பெரிய மலையுச்சியில்தான் இது நடந்தது.
லேசான தூறல். நள்ளிரவு நேரம். விளையாடிக் கொண்டிருந்த குட்டி சற்றே கூட்டத்தை விட்டு விலகிப் போனது. அதற்குத் தெரியுமா. அங்கே ஒரு அதல பாதாளம் இருப்பது? கால் இடறியது. அவ்வளவுதான்! குட்டி அந்தக் கிடுகிடு பள்ளத்திலே உருண்டு புரண்டு கிழே - மிகவும் கீழே - ஒரு பள்ளத்தில் தொப்பென்று விழுந்தது. பிறந்து பதினைந்து நாட்களே ஆகிருந்தாலும் 120 கிலோ எடையுள்ள குட்டி ஆயிற்றே!
ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! சுமார் முன்னூறு அடிப் பள்ளத்தில் உருண்டு வந்து விழுந்த அந்த யானைக் குட்டி உயிரோடிருந்தது. லேசான சிராய்ப்புக் காயங்கள் மட்டும் ஏற்பட்டிருந்தது. பயம், அதிர்ச்சி, வலி இவையெல்லாம் ஒரு சேர நேர்ந்து விட்டது. தன் பிஞ்சுக் குரலால் முடிந்த மட்டும் பிளிறிப் பார்க்கிறது.
அந்தக் குட்டி விழுந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் குடியிருந்தவர்கள் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தந்தார்கள். மின்னல் வேகத்தில் ஒரு மீட்புக் குழு அமைக்க்கப் பட்டது. புறப்பட்டோம். கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் பறந்தது.
மிக ஸ்ட்ராங்கான வலை, அதில் குட்டியை இருத்தித் தூக்க வலுவான கம்புகள், டார்ச் லைட், முதலுதவி மருந்துகள் சகிதம் ஆதிவாசிகள் சிலரையும் அழைத்துக் கொண்டு அந்த நள்ளிரவில் குழு தன் பயணத்தை ஆரம்பித்தது. வாகனம் செல்லும்வரை அதில் சென்றுவிட்டு குட்டி விழுந்து கிடந்த இடத்தை நோக்கி நடைப் பயணம் ஆரம்பமானது. வழியும் கிடையாது. செங்குத்தான மேட்டில் ஏறினால்தான் குட்டி கிடக்கும் இடத்தை அடைய முடியும். செடி, கொடி, புதர்களை வெட்டிப் பாதை ஏற்படுத்தி ஒரு வழியாக ஸ்பாட்டுக்குப் போய்ச் சேர்ந்தாகிவிட்டது.
குட்டி விழுந்த இடமோ சேறும் சகதியுமாய் இருக்கிறது. ஆதிவாசிகள் ஆதரவாய்க் குரல் கொடுத்துத் தடவிக் குட்டியைச் சமாதானப் படுத்த முயன்றனர். காயங்களுக்கு மருந்து தடவப்பட்டது. இதற்குள் பொழுதும் விடிய ஆரம்பித்தது. மருத்துவர் குழுவும் வந்து சேர்ந்தது.
7
comments